கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

Archive for the ‘லீனக்ஸ்’ Category

விண்டோஸில் இருந்தே யூனிக்ஸ் பழகுங்கள்!

Posted by Clement மேல் ஒக்ரோபர் 7, 2008


கணினி கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலானவர்களுக்கு யூனிக்ஸ் அல்லது லீனக்ஸ் இயங்குதளத்தில் பயிற்சி பெறுவது தேவையாகிறது. கல்லூரிகளில் இதற்கான வசதி இருந்தாலும் வீட்டுக் கணினியில் பயிற்சி செய்து பார்க்க வேண்டும் என்றால் விண்டோஸ் மட்டுமே நிறுவப்பட்ட கணினியில் சற்று சிக்கல் தான். கணினியை டூயல் பூட் செய்யுமாறு அமைத்து லீனக்ஸ் நிறுவ வேண்டும். லீனக்ஸ் ஆர்வலர்கள் பலருக்கும் இது ஒன்றும் பெரிய விஷயமாக இல்லாமல் இருந்தாலும், பரீட்சையின் போது மட்டும் யூனிக்ஸ் பழகினால் போதும் என்று நினைக்கும் விண்டோஸ் விரும்பிகள் என்ன செய்வது?
இதற்கு சரியான தீர்வு சிக்வின் (Cygwin) உபயோகிப்பது தான். சிக்வின் என்பது விண்டோஸில் இயங்கும் ஒரு லீனக்ஸ் எமுலேட்டர் ஆகும். அதாவது இது முழுமையான லீனக்ஸ் அல்ல; ஆனால் லீனக்ஸ் “மாதிரி” ஒரு சூழலை நமக்கு உருவாக்கி கொடுக்கும்.

சிக்வின் ஷெல்

சிக்வின் ஷெல்

இந்த சிக்வின் எமுலேட்டரை கணினியில் நிறுவ, சிக்வின் செட்-அப் செயலியை http://cygwin.com/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த செட்-அப் செயலி அரை மெகாபைட்டுக்கும் குறைவான அளவிலான ஒரு கோப்பு ஆகும். இதை இயக்கியபின் பல தெரிவுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நமக்கு தேவையான பேக்கேஜுகளை (வசதிகளை) நிறுவிக் கொள்ளலாம். இந்த பேக்கேஜுகள் பல நூறு மெகாபைட்டுகள் அளவிலானதாகும். தேவையானவர்றை மட்டும் தெரிவு செய்யவும். இதன் டிபால்டு தெரிவு மிகக் குறைந்த அளவிலான பேக்கேஜுகளையே கொண்டிருக்கும். அடிப்படை கமாண்டுகளை பழகிப் பார்க்க இது போதுமானதாகும். சற்று கூடுதல் வசதிகள் வேண்டுமானால் (டெக்ஸ்டு எடிட்டர்கள் கூட டிபால்டு தெரிவில் இருக்காது!) நாம் தான் தேவையானவற்றை தெரிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செட்-அப் புரோகிராமை நமக்கு தேவையான பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் இயக்கி பேக்கேஜுகளை தேவைக்கேற்ப நிறுவிக்கொள்ளலாம்.

பேக்கேஜ் தெரிவு

பேக்கேஜ் தெரிவு

மாணவர்கள் மட்டுமன்றி கணினிப் பொறியாளர்களும் தங்கள் ஆராய்ச்சி/சோதனை பணிகளுக்கேற்ப உபயோகப்படுத்துமாறு பல பேக்கெஜுகள் இதில் உள்ளன. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!

Advertisements

Posted in செய்முறை, மென்பொருள், லீனக்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: | 8 Comments »

வுபி – வின்டோஸில் ஒரு லீனக்ஸ் இன்ஸ்டாலர்!

Posted by Clement மேல் ஓகஸ்ட் 13, 2008


உபண்டு லீனக்ஸ்

உபண்டு என்பது இலவசமாக கிடைக்கக் கூடிய லீனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்களில் ஒன்று. உபண்டு இலவசமாக கிடைப்பது மட்டுமன்றி அவ்வப்பொழுது மேம்படுத்தப் படுவதால், தரமான ஒரு லீனக்ஸ் வெளியீடாகவும் விளங்குகிறது. அதனாலேயே கணினி ஆர்வலர் பலராலும் லேப்டாப்பிலும், டெஸ்க்டாப்பிலும் உபயோகப்ப்டுத்தப்பட்டு வருகிறது.

விண்டோஸ் + லீனக்ஸ்

விண்டோஸ் உபயோகித்து பழக்கப்பட்டவர்கள் தங்களது கணினியில் லீனக்ஸ் நிறுவும் பொழுது  விண்டோஸை நீக்காமல் அப்படியே லீனக்ஸையும் சேர்த்து நிறுவுதலையே விரும்புகிறார்கள். சாதாரணமாக லீனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை விண்டோஸ் உள்ள கணினியில் நிறுவ வேண்டுமென்றால் அதற்கென தனி பார்டிஷனில் நிறுவி, டூயல் பூட் செய்யுமாறு அமைக்க வேண்டும். உபயோகப்படுத்திப் பார்த்து விட்டு பின் லீனக்ஸ் வேண்டாம் என்றால் அதை நீக்குவதற்கும் பார்டிஷனில் “கை வைக்க” வேண்டும். சமயத்தில் விண்டோஸையும் திரும்ப நிறுவ வேண்டியிருக்கும். “லீனக்ஸ் எப்படித்தான் இருக்கிறதென்று பார்ப்போமே..” என்று சோதித்து பார்க்க வேண்டுமென நினைக்கும் பொது ஜனத்திற்கு, இதெல்லாம் வேண்டாத வீர விளையாட்டாக  தோன்றும்.

லைவ் சி.டி.

லீனக்ஸில் “லைவ் சி.டி” என்பது, லீனக்ஸை நிறுவாமலேயே பூட்டபிள் சி.டி. டிரைவிலிருந்து அப்படியே இயக்க வல்ல ஒரு வெளியீடாகும். நாப்பிக்ஸ் லைவ் சி.டி. ஒரு பிரபல லைவ் சி.டி. வெளியீடாகும். உபண்டுவிலும் லைவ் சி.டி. வெளியீடு உள்ளது. ஆனால் லைவ் சி.டி உபயோகப்படுத்திய பலரும் அதனை “எப்பொழுதாவது ஒரு சில சமயம்” உபயோகப்படுத்த சரியே தவிர “தினந்தோறும்” உபயோகப் படுத்த, ஹார்ட் டிஸ்க்கில் நிறுவப்பட்டது போல் சகஜமாக உபயோகிக்க முடிவதில்லை என்று உணருகின்றனர். நம்முடைய தனிப்பட்ட செட்டிங்குகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு முறை பூட் செய்யும் பொழுதும் பெர்சிஸ்டன்ட் செட்டிங்-ஐ லோடு செய்ய வேண்டியிருத்தல், சி.டி. டிரைவ் ஆக்கிரமிக்கப்படுதல், சி.டி. கீறல் விழுந்து சரியாக இயங்காமல் நாம் வேலை செய்யும் பொழுது பாதியில் நின்றுபோதல் ஆகிய பிரச்சினைகளே இதற்கு காரணம்.

விண்டோஸ் உபண்டு இன்ஸ்டாலர்! – வுபி

சாதாரண பொது ஜனமும் நினைத்த பொழுது லீனக்ஸை நிறுவவும் நீக்கவும் என்ன செய்வது? உபண்டுவின் வுபி இதற்கு ஒரு சரியான தீர்வாகும். விண்டோஸில் இருந்து கொண்டே உபண்டு லீனக்ஸை நிறுவவும், தேவையில்லை என்றால் பின் நீக்கவும் ஒரு விண்டோஸ் இன்ஸ்டாலரை தயாரித்து உள்ளனர் உபண்டு தயாரிப்பாளர்கள்.

இந்த இன்ஸ்டாலர், பயனாளரிடம் மிகக் குறைந்த எண்ணிக்கை கேள்விகளையே கேட்டு பின் தானே உபண்டுவை நிறுவி விடுகிறது.

இதில் உபண்டு ஒரு தனி டைரக்டரியிலேயே நிறுவப்படுகிறதால் ஹார்ட் டிஸ்க் பார்டிஷனில் மாற்றம் செய்யத் தேவை இல்லை. வேண்டாம் என்று இதை நீக்குவதும் சுலபம். விண்டோஸில் இருந்தே இதை இலகுவாக நீக்கலாம்!

இனி எல்லோரும் லீனக்ஸை “ஒரு கை” பார்க்கலாம்!

பி.கு. இது கிடைக்குமிடம் இங்கே – http://wubi-installer.org/

Posted in மென்பொருள், லீனக்ஸ் | குறிச்சொல்லிடப்பட்டது: | 7 Comments »

 
%d bloggers like this: