கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

Archive for the ‘மென்பொருள்’ Category

இறுக்குங்கள் இணையத்தை! பரீட்சை வருகிறது!

Posted by Clement மேல் பிப்ரவரி 16, 2011


“பரீட்சை நெருங்கிக்கிட்டே வருது, நம்ம பயப் புள்ளைங்களுக்கு கவலையே இல்லே! ஸ்கூல்லேர்ந்து வந்ததிலிருந்து, நான் வீட்டுக்குப் போகுற வரைக்கும் கம்ப்யூட்டர் முன்னே தான் இருக்கானுங்க. என்னமோ எஃப்.பி – ங்குறான், ட்விட்டர் – ங்குறான், என்ன பண்ணுறானுங்கன்னே தெரியலே. எனக்கும் என்ன பண்ணுறதுன்னே புரியலே….” என்று ஒருவர் தன் புலம்பலை தேனீர் வேளையில் ஆரம்பிக்க, சற்று நேரத்திற்கெல்லாம்  அது தேனீரைவிட சூடான டாபிக் ஆகிவிட்டது.

“கம்ப்யூட்டர் மூலமா வருகிற பிரச்சினைய கம்ப்யூட்டர் மூலமா தான் தீக்கணும். கம்ப்யூட்டரிலே யார் யார் என்னென்ன காரியம் எவ்வளவு நேரம் செய்யலாங்கறத  கன்ட்ரோல் பண்ற மாதிரி சாஃப்ட்வேர் இருக்கிறதா அமெரிக்கவிலே இருக்கிற என் கோ-பிரதர் சொன்னார்…” என்று ஒருவர் சொல்ல, கவனம் என் பக்கம் திரும்பியது.

நானும் நெட் நேன்னி என்றெல்லாம் கெள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அதெல்லாம் இலவச மென்பொருள் இல்லை. அதுமட்டுமல்லாது இதுபோன்ற மென்பொருட்கள் பொதுவாக இலவசமாக கிடைக்காது. அப்படியே இலவசமாக தருவதாக கூறினாலும், நம்பகமானதாக இருக்குமா என்று சந்தேகமே, அதாவது ஸ்பைவேர் ஏதாவது இருக்கலாம் என்று அப்போதைக்கு கூறி வைத்தேன்.

தேனீர் அருந்தியவாறே கூகிளில் தேடிய பொழுதும், நான் கூறியவாறே நம்பத் தகுந்தவாறு எதுவும் இலவசமாக கிட்டவில்லை.

இருந்தாலும் எனக்குள் ஒரு கேள்வி. இதற்கென ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மென்பொருளோ, இலவச மென்பொருளோ இருக்காதா என்ன?

நன்றாக தேடித்தான் பார்ப்போமே என்று இரவு உணவிற்குப் பின் அமர்ந்து அலசியபொழுது இவை இரண்டு கண்ணில் பட்டது.

1. ஃபிரீ இன்டர்நெட் செக்யூரிட்டி கன்ட்ரோலர்

இது குனு ஜிபிஎல் லைசென்சின் கீழ் வெளியிடப்படுகிறது. இதற்கான ஸோர்ஸ்ஃபோர்ஜ் பக்கத்தை இங்கே காணலாம்.

http://sourceforge.net/projects/fisecurity/

2. கே9 வெப் புரொடெக்ஷன்

இது வீட்டு உபயோகத்திற்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இலவச உபயோகமாக இருந்தாலும், இதற்கு ஒரு லைசென்ஸ் தேவைப்படுகிறது. உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளித்தால், சற்று நேரத்திற்கெல்லாம் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு லைசென்ஸ் வழங்கப் படும் என்று அறிவிக்கிறது இந்த பக்கம்.

http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free

வீட்டில் தற்பொழுது லீனக்ஸ் உபயோகிக்கிறேன் என்பதால் உடனே நிறுவிப் பார்க்க வில்லை. (ஸ்கிரீன்ஷாட் அந்த இணைய தளத்திலிருந்தே பதிவிறக்கம் செய்யப்பட்டது!)

தேவைப்படுபவர்கள் நிறுவி உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனுபவம், மற்றும் மேலும் தகவல் அறிந்தால் பின்னூட்டம் அளிக்கவும். எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

Posted in இணையம், மென்பொருள் | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

ஸ்கிரீன் சேவரில் ஒரு டீஃபிராக்மென்டர்!

Posted by Clement மேல் பிப்ரவரி 15, 2011


கணினி முழு திறனுடன் இயங்குவதற்காக நாம் கையாள வேண்டிய வழிமுறைகளை முந்தைய இடுகை ஒன்றில் எழுதியிருந்தேன். அதில் நான்காவது வழிமுறையாக ஹார்ட் டிஸ்கை டீஃபிராக்மென்ட் செய்வது என்று எழுதி இருந்தேன். இதுதான் மற்ற மூன்றைவிட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதனாலேயே இப்பணி சாதாரணமாக எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறது. டீஃபிராக்மெண்டரை ஆரம்பித்து விட்டு கணினி முன்னால் சும்மா உட்கார்ந்து கொண்டு யார் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது? அது முழுவதுமாக தன் வேலையை முடிப்பதற்குள் பொறுமை இழந்து நிறுத்தி விடுகிறோம். அதன் பின் திரும்பவும் இயக்குவதில்லை.

இதற்கு என்ன தீர்வு? நாம் கணினியில் வேலையை சற்றே நிறுத்தி இருக்கும் பொழுது அதை உணர்ந்து கொண்டு தானாகவே டிஃபிராக்மெண்டர் வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதுவும் நாம் மீண்டும் வேலையை தொடரும் பொழுது தன் வேலையை நிறுத்திக் கொண்டு நம்மை வேலை செய்ய விட்டால்? ஆஹா! இதற்கு மேல் என்ன வேண்டும்?

இதற்கு நமக்கு உதவுகிறது மைடீஃபிராக் (http://www.mydefrag.com). இதை நிறுவும்பொழுதே ஸ்கிரீன்சேவர் ஆப்ஷனையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

இது நிறுவப்பட்டவுடன், விண்டோஸின் ஸ்கிரீன் சேவர் செட்டிங்ஸ் டயலாக் பெட்டி காண்பிக்கப் படும். அதில் மைடிஃபிராக் ஸ்கிரீன் சேவரை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி டீஃபிராக்மெண்டேஷனைப் பொறுத்தவரை, மினிமம் பெய்ன்! மேக்ஸிமம் கெய்ன்!! ஜமாய்!!!

கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்:  விண்டோஸ் விஸ்டாவின் யூசர் அக்கவுண்டு கண்ட்ரோலை டிசேபிள் செய்து விடவும். இல்லையென்றால் ஒவ்வொறு முறை இந்த புரோக்கிராம் தானாக இயங்கும் பொழுதும், விஸ்டா இதை தடுக்க வாய்ப்பு உள்ளது!

Posted in மென்பொருள் | Leave a Comment »

 
%d bloggers like this: