கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

Archive for the ‘செய்முறை’ Category

வேர்டு, ரைட்டர்: தகவலை வரிசைப் படுத்துவது எப்படி?

Posted by Clement மேல் மார்ச் 1, 2011


பொதுவாக நாம் எக்செல், கால்க் போன்ற ஸ்பிரெட்ஷீட் உபயோகிக்கும் பொழுது தகவலை வரிசைப்படுத்த (sort செய்ய)  வேண்டியிருக்கும். அவ்வாறே வரிசைப்படுத்தல் வசதியை பல முறை உபயோகப் படுத்தியும் இருப்போம். எம்.எஸ். வேர்டு, ஓப்பன் ஆஃபீஸ் ரைட்டர் போன்ற டாக்குமெண்டரை உபயோகப் படுத்தும் பொழுது அதில் டேபிளை உபயோகப்படுத்துவோமேயானால், அந்த டேபிளில் உள்ள தகவலை எவ்வாறு வரிசைப்படுத்துவது? அதைப்பற்றியே இந்த இடுகையில் எழுதுகிறேன்.

முதலில் வேர்டை எடுத்துக் கொள்வோம். டேபிளின் ஏதாவது ஒரு செல்லில் இருந்து கொண்டு மெனுவில் டேபிள் >> சார்ட் என்று தெரிவு செய்யவும். உங்கள் டேபிள் தானாகவே தெரிவு செய்யப்பட்டு வரிசைப்படுத்துதல் டயலாக் பெட்டி காண்பிக்கப்படும். இதையே நீங்கள் டேபிள் >> செலக்ட் >> டேபிள் என்று டேபிளை முதலில் தெரிவு செய்து கொண்டு அதற்குப் பின் டேபிள் >> சார்ட் என்றும் தெரிவு செய்யலாம். ஆனால் வேர்டு இண்டெலி-சென்ஸ் (intelli-sense) திறன் கொண்டது. அதாவது நாம் என்ன செய்யப் போகிறோம் என்று புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும். நாம் டேபிளை செலெக்ட் செய்யா விட்டாலும் டேபிளை சார்ட் செய்ய முற்படும் பொழுது அதுவாகவே டேபிளை செலெக்ட் செய்து கொள்ளும்.

மேலே இருப்பது போல் சார்ட் டயலாக் பெட்டி காண்பிக்கப் பட்டவுடன் இலகுதான் நம் வேலை. நாம் வரிசைப் படுத்தவேண்டிய பத்தியை தெரிவு செய்து கொண்டு, நம் டேபிளில் தலைப்பு இருந்தால் ஹெடர் ரோ ரேடியோ பட்டனையும், தலைப்பு இல்லாவிடில் நோ ஹெடர் ரோ ரேடியோ பட்டனையும் தெரிவு செய்து கொண்டு, ஓகே பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்!

இனி ஓப்பன் ஆஃபீஸ் ரைட்டருக்கு வருவோம். ஓப்பன் ஆஃபீஸ் தொகுப்பில் இண்டெலி-சென்ஸ் இல்லை. டேபிளை நாம் தான் தெரிவு செய்ய வேண்டும். வரிசைப்படுத்தும் வசதி (sort command) டேபிள் மெனுவில் இல்லை! டூல்ஸ் மெனுவில் உள்ளது!! இது தவிர டேபிளை தெரிவு செய்யும் பொழுது ஹெட்டிங் ரோ இருந்தால் அதை தவிர மற்றவற்றை தெரிவு செய்ய வேண்டும். (இது ஏன் என்று இன்னும் சற்று நேரத்தில் பார்ப்போம்.)

ஆகவே டேபிளின் ஏதாவது ஒரு செல்லில் இருந்து கொண்டு, மெனுவில் டேபிள் >> செலக்ட் >> டேபிள் என்று தெரிவு செய்து டேபிளை செலக்ட் செய்து கொள்வது ஹெட்டிங் ரோ இல்லையென்றால் தான். ஹெட்டிங் ரோ இருந்தால் ஹெட்டிங் ரோவிற்கு கீழே முதல் ரோவின் முதல் செல்லில் கீபோர்டு கர்சரை வைத்து, ஷிஃப்ட் கீயை பிடித்தபடி கடைசி ரோவின் கடைசி செல்லில் கிளிக்கினால் ஹெட்டிங் ரோவை தவிர மற்ற செல்கள் அனைத்தும் தெரிவு செய்யப்படும்.

அதன் பின் மெனுவில் டூல்ஸ் >> சார்ட் என்று தெரிவு செய்யவும். இங்கே கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீங்கள் எதையும் செலக்ட் செய்யாமல் டூல்ஸ் >> சார்ட் மெனுவை தேர்ந்தெடுக்க முடியாது. ஏனென்றால் சார்ட் மெனு மங்கலாக்கப் பட்டு டிசேபிள்டு ஆகியியிருக்கும். இவ்வாறு சார்ட் மெனுவை தேர்ந்தெடுத்த பின்னர் சார்ட் டயலாக் பெட்டி திரையில் காண்பிக்கப் படும்.

வேர்டை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இதில் சில வித்தியாசங்கள் இருப்பதை காண்பீர்கள். உங்கள் டேபிளில் ஹெட்டிங் ரோ இருக்கிறதா இல்லையா என்று கேட்கும் ஆப்ஷன் இதில் இல்லை. அதனாலே தான் மேலே குறிப்பிட்டபடி டேபிளை செலக்ட் செய்யும் பொழுதே ஹெட்டிங் ரோவை தவிர்த்து மற்ற செல்களை செலக்ட் செய்ய வேண்டும். நீங்கள் வரிசைப்படுத்த விரும்பும் பத்தி, டேபிளில் எத்தனையாவதாக அமைந்திருக்கிறது என்று தெரிவு செய்து கொண்டு ஓகே பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான்!

ரைட்டரின் சார்ட் டயலாக் பெட்டியைப் பார்க்கும் பொழுது, இதில் மேலிருந்து கீழ் மட்டுமல்ல இடமிருந்து வலமாகவும் வரிசைப்படுத்தலாம் என்று அறிந்து கொள்ள முடியும்! இதைப் பற்றியும், மேலும் சில வரிசைப்படுத்தும் வழிகள் பற்றியும் மேலும் எழுதுகிறேன்…

Advertisements

Posted in அலுவல், செய்முறை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | Leave a Comment »

எக்செல், கால்க்: இலகுவாக டேபிளை தெரிவு செய்ய

Posted by Clement மேல் பிப்ரவரி 25, 2011


மைக்ரோசாஃப்ட் எக்செல் மற்றும் ஓப்பன் ஆஃபீஸ் கால்க் ஸ்பிரெட்ஷீட்டுகளில் டேபிள் வடிவமைத்து நாம் உபயோகப் படுத்துவது உண்டு. அவ்வாறு உபயோகப் படுத்தும் பொழுது பல சமயம் அந்த டேபிளை மட்டும் தெரிவு (செலக்ட்) செய்ய வேண்டி வருவது உண்டு. உதாரணமாக அந்த டேபிளில் உள்ள செல்களுக்கு பார்டர் அமைப்பதற்காக தெரிவு செய்ய வேண்டி வரலாம்.

டேபிள் சிறியதாக இருக்கும் பொழுது இது ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் டேபிள் சற்று பெரியதாக இருந்தால் அதை தெரிவு செய்ய சற்று முயற்சி எடுக்க வேண்டி இருக்கும். இதுவும் மிக பிரமாதம் இல்லை என்றாலும், அடிக்கடி இதை செய்ய வேண்டி வரும் பொழுது, சுருக்கு வழி ஏதாவது இருக்காதா என்று எண்ணத் தோன்றும். இருக்கத்தான் செய்கிறது இதற்கு ஒரு சுருக்கு வழி. அதுவும் எக்ஸெல் மற்றும் கால்க் ஆகிய இரண்டிலுமே வேலை செய்யும் ஒரு சுருக்கு வழி.

டேபிளின் ஏதாவது ஒரு (காலி அல்லாத) செல்லில் இருந்து கொண்டு கண்ட்ரோல் மற்றும் ஆஸ்டெரிஸ்க் விசிகளை அழுத்தவும். அவ்வளவுதான். அந்த டேபிளின் எல்லா செல்களும் தெரிவு செய்யப்பட்டு விடும்!

Posted in அலுவல், செய்முறை | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 5 Comments »

 
%d bloggers like this: