கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

ஃபைல் செர்வர் ரிஸோர்ஸ் மேனேஜர்: ஓர் அறிமுகம்

Posted by Clement மேல் ஜூலை 25, 2012


குருபிரசாத் செய்து கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது எனக்கும் அதுபோல் செய்து பார்க்க வேண்டும் என்று ஒரு நிமிடம் ஆசையாக இருந்தது! அத்தனை ஃபைல்களை ஒட்டுமொத்தமாக இதுவரை நான் டெலீட் செய்ததே இல்லை! அதுவும் மேனுவலாகவிண்டோஸ் எக்ஸ்புளோரரில் இரகவாரியாக அடுக்கிக் கொண்டு, ஆயிரக் கணக்கில் டெலீட் செய்து கொண்டிருந்தார்.

ஹூம்இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்என்று நினைக்கையில் என் பக்கம் திரும்பிய குரு, ”இதற்கு ஒரு வழி இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று கேட்டவுடன் தான் ஏதோ பிரச்சினை என்று புரிந்தது. பொறுமையாக விசாரித்ததில் அவருடைய பிரச்சினையும் புரிந்தது.

ஃபைல் செர்வரில், ஒவ்வொறு செக்‌ஷனுக்கென்று தனித் தனியாக இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார். பயனாளர்களோ, தங்கள் ஃபோல்டர்களில் அலுவலக கோப்புகளைத் தவிர எம்.பி.3, மூவி என்று ஜி.பி. கணக்கில் நிரப்பி வைத்து விட, இவர் பாவம் அவ்வப்பொழுது தேவையற்ற கோப்புகளை மேனுவலாக டெலீட் செய்கிறார். அவ்வாறு செய்யவில்லை என்றால் பேக்கப் எடுக்கும் பொழுது மணிக்கணக்கில் ஓடுகிறது என்கிறார்.

இவ்வளவுதான் பிரச்சினை! ஆனால் இதற்காக அவரைப்போல் மூன்றாம் நபர் யுட்டிலிட்டி எல்லாம் தேடத் தேவையில்லை. விண்டோஸ் செர்வரிலேயே இதற்கான தீர்வு இருக்கிறது. இந்தத் தீர்விற்குப் பெயர், ஃபைல் செர்வர் ரிஸோர்ஸ் மேனேஜர். இது விண்டோஸ் 2003-இல் ஆறிமுகப்படுத்தப்பட்டது. குரு உபயோகிப்பது விண்டோஸ் 2008. பிறகென்ன?

ஃபைல் செர்வர் ரிஸோர்ஸ் மேனேஜர் (எஃப்.எஸ்.ஆர்.எம்) என்றால் என்ன?

எஃப்.எஸ்.ஆர்.எம் என்பது, செர்வரில் சேமிக்கப்படும் கோப்புக்களின் அளவு மற்றும் வகைகளை கட்டுப்படுத்தவும், சேமிக்கப்படும் கோப்புக்களைப் பற்றிய ஆடிட் ரிப்போர்டுகள் மற்றும் மின்னஞ்சல் அறிவிப்புகளை உருவாக்கவும் உதவும் கருவிக் கூட்டாகும் (டூல் செட்).

குருவிற்கு இது எப்படி உதவும்?

 • கோட்டா மேனேஜ்மென்ட்:

குரு முதலில் செய்ய வேண்டியது, இந்த கோட்டா மேனேஜ்மென்ட்தான். எந்தெந்த ஃபோல்டரில் எந்த அளவு வரை உபயோகிக்கலாம் என்று நிர்ணயித்து விட்டால், அந்த அளவிற்கு மேல் பயனாளர்களால் அந்த ஃபோல்டரில் கோப்புகளை சேமிக்க முடியாது.

 • ஃபைல் ஸ்கிரீனிங் மேனேஜ்மென்ட்:

குரு இரண்டாவதாக செய்ய வேண்டியது இது. ஃபைல் ஸ்கிரீனிங் என்பது ஒருவித ஃபில்டர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்! எம்.எஸ். ஆஃபீஸ் கோப்புக்களை மட்டும் பயனாளர்கள் சேமிக்க அனுமதிக்க வேண்டும் என்று விரும்பினால், doc, docx, xls, xlsx, ppt, pptx போன்ற எக்ஸ்டென்ஷனைக் கொண்ட கோப்புக்களை மட்டும் அனுமதிக்குமாறு செட்டிங்குகளை அமைக்க வேண்டும். அல்லது தவிற்கப்பட வேண்டிய எக்ஸ்டென்ஷன்களை மட்டும் எக்ஸ்குளூட் செய்யுமாறு செட்டிங்குகளை அமைக்கலாம்.

இதற்கென டிஃபால்ட்டாக ஒரு சில டெம்பிளேட்டுகள் உள்ளன. அவற்றையே உபயோகிக்கலாம். அல்லது உங்கள் தேவைக்கேற்ப நீங்களே செட்டிங்குகளை அமைத்துக் கொள்ளலாம்.

குருவிற்கு இன்னும் விளக்கமாக சொல்லியா தரவேண்டும்? ஒரு புள்ளி வைத்துக் கொடுத்தால் போதாதா?

எங்கு தேடியும் எஃப்.எஸ்.ஆர்.எம் ஐ காணவில்லையே?

டிஃபால்ட்டாக நிறுவப்படாமல் இருக்கலாம். கன்ட்ரோல் பானலிற்கு சென்று விண்டோஸ் காம்பொனென்ட்ஸ் இல் எஃப்.எஸ்.ஆர்.எம் ஐ தெரிவு செய்து நிறுவுங்கள். நிறுவியபின் ஞாபகமாக செர்வரை ரீபூட் செய்யுங்கள். இப்பொழுது அட்மினிஸ்ட்ரேட்டிவ் டூல்ஸ் இல் எஃப்.எஸ்.ஆர்.எம் ஐ தெரிவு செய்து உபயோகியுங்கள்.

இனி உங்கள் பிரச்சினை ஆட்டோமேட்டிக்காக கவனிக்கப்பட்டுவிடும். என்ன குரு? சரிதானே?

Advertisements

2 பதில்கள் to “ஃபைல் செர்வர் ரிஸோர்ஸ் மேனேஜர்: ஓர் அறிமுகம்”

 1. Aravind Kumar.B said

  Sir,
  It’s so useful for me as a system admin. I know this feature will be available. But i never think it’s so simple. Thanks.

  • விண்டோஸில் இந்தக் கருவிக் கூட்டானது ஒரு புதைந்து கிடக்கும் பொக்கிஷம் என்று நினைக்கிறேன். அதனால்தான் அதைக் காண முடியவில்லை என்றால் நிறுவிக் கொள்ள வேண்டும் என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளேன். விண்ட்டொஸ் என்.டி காலத்திலும், விண்டோஸ் 2000 செர்வெர் காலத்திலும், இவ்வளவு இலகுவாக இருந்ததில்லை.
   இப்பதிவு உங்களுக்கு உதவியாக இருந்ததற்கு மகிழ்ச்சி.
   தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: