கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

ஆர்.டி.எஸ்: சிறு விளக்கம்

Posted by Clement மேல் ஜூலை 23, 2012


புதிதாக மொபைல் போன் வாங்கும் பொழுது, அதன் விவரக்குறிப்பேட்டில் எஃப்.எம் ரேடியோ ஆர்.டி.எஸ்என்று பார்த்திருப்பீர்கள். ஒரு சில மொபைல் ஃபோன்களில் ஆர்,டி.எஸ் வசதி இருக்கும். ஒரு சிலவற்றிலோ இருக்காது. சரி. அது என்ன ஆர்.டி.எஸ்? என்று நீங்கள் எனப்பொழுதாவது நினைத்திருப்பீர்களானால், அதற்காக இதோ ஒரு சிறு விளக்கம்.

Image

ஆர்.டி.எஸ். என்பது ரேடியோ டேட்டா சர்வீஸ்என்பதன் சுருக்கமாகும். ரேடியோ டேட்டா சர்வீஸ் என்பது ஒரு தகவல் தொழில்நுட்ப நெறிமுறையாம். இந்நெறிமுறையின் கரு என்னவென்றால், ரேடியோ அதாவது வானொலி அலைகளுடன் டேட்டாவையும் சேர்த்து ஒலிபாரப்புவதுதான்.

சரி புரிந்து விட்டது. ஆனால் இவ்வாறு டேட்டாவையும் சேர்த்து ஒலிபரப்புவதால் என்ன பயன்? என்று வினவுவீர்களானால் அதையும் இப்பொழுது பார்த்து விடுவோம்.

சாதாரண ரேடியோவில் ஒவ்வொறு வானொலி நிலையத்தையும் அதன் அதிர்வலை எண்ணை நினைவில் கொண்டு நாம் தெரிவு செய்ய வேண்டும். அல்லது அவ்வப்பொழுது அறிவிப்பாளரால் அறிவிக்கப்படும் வரை பொறுத்திருந்து வானொலி நிலைய பெயரை அறிந்து கொள்ள வேண்டும். அல்லவா?

ஆர்.டி.எஸ். தொழில்நுட்பத்தில், வானொலி நிலையத்தின் பெயர், அப்பொழுதைய நேரம், ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சி அல்லது பாடலின் விவரங்கள் போன்ற தகவல்களை (டேட்டா) ஒலிபரப்பினூடே சேர்த்து அனுப்ப முடியும். இவ்வாறு அனுப்பும் பொழுது, உங்களிடம் ஆர்.டி.எஸ் வசதியுடன் கார் ஸ்டீரியோவோ, மொபைல் ஃபோனோ இருக்குமானால், அதன் திரையில் இந்த தகவல்கள் தெரியும்.

இதெல்லாம் அடிப்படை வசதிகளே. இத்தொழில்நுட்பத்தில் வசதிகள் இன்னும் பல உண்டு.

காரில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பொழுது, ஒரு நிலையத்தின் எல்லையைக் கடப்பீர்களானால், அந்நிலைய அலைகளின் சக்தி குறையுமல்லவா? அப்பொழுது, அதே நிகழ்ச்சி வேறொரு நிலையத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்குமானால் அந்த அதிர்வலைக்கு வானொலி தன்னிச்சையாக மாறிக்கொள்ளும் வசதி; ஏதாவது ஒரு வானொலி நிலையத்தில் முக்கியமான பயண அறிவிப்பு ஒலிபரப்பானால், உங்கள் வானொலியில் வேறு எந்த நிலையம் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அது தானாக தற்காலிக மாற்றம் செய்யப்பட்டு பயண அறிவிப்பு ஒலிக்கப்படும் வசதி போன்ற மேம்பட்ட வசதிகளும் இத்தொழில்நுட்பத்தில் உண்டு.

இந்த மேம்பட்ட வசதிகளெல்லாம் இத்தொழில்நுட்பம் உருவான ஐரோப்பாவில் உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. இந்தியாவில் ஆர்.டி.எஸ் வசதி கொண்ட நிலையங்களில், அடிப்படை வசதிகளான நிலையத்தின் பெயர், பாடல்களின் பெயர் மற்றும் விவரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றது.

இந்த வசதியை நீங்கள் உங்கள் மொபைல் ஃபோனில் உபயோகிப்பதற்கு, செட்டிங்குகளில் ஆர்.டி.எஸ் வசதியை தெரிவு செய்து எனேபிள் செய்ய வேண்டியிருக்கலாம். இன்றே அதை செய்து ஆர்.டி.எஸ்ஐ உபயோகப்படுத்தி மகிழுங்களேன்!

3 பதில்கள் to “ஆர்.டி.எஸ்: சிறு விளக்கம்”

  1. முக்கியமான தகவல்களை தெரிந்து கொண்டேன்.தங்கள் பதிவுக்கு நன்றி !

  2. எம்.கே.பழனிவேல் said

    அருமையான தகவல்

பின்னூட்டமொன்றை இடுக