கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

EXIF என்றால் என்ன?

Posted by Clement மேல் மார்ச் 15, 2012


டிஜிட்டல் காமிராக்களில் எடுத்த புகைப் படங்களைக் கணினியில் கையாளும் பொழுது ‘EXIF information’, ‘EXIF data’ என்றெல்லாம் பார்த்திருப்பீர்கள். இந்த எக்ஸிஃப் என்றால் என்ன, இது நமக்கு எவ்வாறு பயன்படும் என்று இப்பொழுது பார்ப்போம். எக்ஸிஃப் என்பது எக்ஸ்சேஞ்சபிள் இமேஜ் ஃபைல் ஃபார்மேட் என்பதன் சுருக்கமே ஆகும். (Exchangeable Image File Format) இந்த தொழில்நுட்பத்தின் சாராம்சம் என்னவென்றால் டிஜிட்டல் முறையில் தயாரிக்கப்படும் படம் மற்றும் ஒலி கோப்புகளில், உபயோகமுள்ள மற்ற தகவல்களையும் அதாவது அந்த கோப்புகளை தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்களின் செட்டிங்குகள் மற்றும் ஏனைய விஷயங்களையும் அக்கோப்புடன் சேர்த்து சேமிப்பதுதான். இதனால் ஒரு படத்தின் எக்ஸிஃப் தகவலைப் பார்த்தே அது என்றைக்கு எடுக்கப்பட்ட படம், காமிரா மாடல் என்ன, காமிராவின் பல்வேறு செட்டிங்குகளின் அளவு போன்ற விஷயங்களை அறிந்து கொள்ளலாம். சரி. புரிந்து விட்டது. ஆனால் இதனால் நமக்கு என்ன பயன் அல்லது இந்த தகவலை நாம் எவ்வாறு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்?

படங்களின் மேலாண்மை:

உங்கள் கணினியில் பல நூறு படங்களை சேமித்து வைத்திருப்பீர்களானால் அவற்றை தரம் பிரித்து இலகுவாக கையாள பிகாஸா, டிஜிகேம், ஐஃபோட்டோ போன்ற ஃபோட்டோ மேனேஜ்மென்ட் மென்பொருட்களை உபயோகிக்கிறீர்கள் அல்லவா? இந்த மென்பொருட்கள் உங்கள் படங்களை, பிடிக்கப்பட்ட தேதிவாரியாக (மாதவாரியாக, வருடவாரியாக) அடுக்க மற்றும் தேட இந்த எக்ஸிஃப் தகவலையே உபயோகிக்கிறது. (அதனால் நீங்கள் படங்களை எடிட் செய்து சேமிக்கும் பொழுது, இந்த எக்ஸிஃப் தகவல் அழியாமல் கவனம் கொள்ள வேண்டும்). தற்போதைய உயர்தர காமிராக்களில் படம் பிடிக்கப்பட்ட இடம் கூட ஜிபிஎஸ் வாயிலாக அறியப்பட்டு எக்ஸிஃப் தகவலில் பதியப்படுகிறது.

டிஜிட்டல் ஃபோட்டோகிராஃபி பயில:

நீங்கள் எடுக்கும் படத்தின் தரம், படம் எடுக்கப்படும் சூழலுக்கு ஏற்றவாறு காமிரா செட்டிங்குகளை அமைப்பதில் தான் பெருவாரியாக அடங்கியுள்ளது. ஒரே நாளில் பல படங்களை எடுக்கும் பொழுது, எந்த ஷாட்டிற்கு என்ன செட்டிங்கு உபயோகித்தோம் என்று நினைவில் கொள்வது கடினம். நீங்கள் எடுத்த படங்களை கணினியில் பார்த்து ஆராயும் பொழுது, இந்த எக்ஸிஃ ப் தகவலில் உள்ள காமிரா செட்டிங்குகளை ஆராய்வதன் மூலம் எந்த மாதிரியான செட்டிங்குகள் நல்ல தரமான படங்களை உருவாக்குகின்றது என்று காண முடியும். நீங்கள் எடுத்த புகைப்படங்களை மட்டுமல்லாது மற்றவர்கள் எடுத்த தரமான படங்களையும் இவ்வாறு ஆராய்வதன் மூலம், எந்தெந்த காமிராக்களில் என்னென்ன செட்டிங்குகளை உபயோகப்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொண்டு, நீங்களும் தரமான படங்களை எடுக்க கற்றுக் கொள்ளலாம்! எல்லாம் ஓ.கே! ஆனால் ஒரு படத்தின் எக்ஸிஃப் தகவலை எவ்வாறு காண்பது? அடடே! இது ஒன்றும் பிரமாதம் இல்லை! நீங்கள் உபயோகிக்கும் ஃபோட்டோ மேனேஜ்மென்ட் மென்பொருள் எதுவாக இருந்தாலும் அதில் இந்த வசதி நிச்சயம் இருக்கும். மேலும் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலுள்ள ஃபைல் எக்ஸ்புளோரரின் ஃபைல் புராப்பர்டீஸ் அப்லெட் (வலது கிளிக் >> புராப்பர்டீஸ்) வாயிலாகவும் எக்ஸிஃப் தகவலை காணலாம்.

உபுண்டு லீனக்ஸின் ஃபைல் புராப்பர்டீஸ் அப்லெட்

பிறகென்ன? நீங்களும் ஒரு கைதேர்ந்த டிஜிட்டல் ஃபோட்டொகிராஃபர் ஆக வேண்டியதுதானே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: