கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

வேர்டு: ஹலோ டெஸ்டிங்!

Posted by Clement மேல் பிப்ரவரி 28, 2011


நமக்கு சில சமயங்களில் மைக்ரோசாஃப்ட் வேர்டில் சாம்பிளுக்காக ஒரு சில வரிகளை தட்டச்சிக்க வேண்டிய தேவை வருவதுண்டு. இது பிரின்டரை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவோ,  வேர்டின் சில வசதிகளை நண்பருக்கு எடுத்துக் காட்டுவதற்காகவோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ இருக்கலாம்.

இந்த மாதிரி சமயங்களில் சிலர் விளையாட்டாக கைக்கு வந்தபடி “sdsdsad qwwqwrr fsdfsdfadf…” என்றெல்லாம் தட்டச்சித்து தம் தேவையை பூர்த்தி செய்து கொள்ளுவார்கள். வேறு சிலரோ ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும் ஏதாவது ஒரு கோப்பை திறந்து, அதை வைத்து, நண்பருக்கு சொல்லிக் கொடுப்பதையோ அல்லது பிரிண்டரை பரிசோதிப்பதையோ செய்து விட்ட பின் தாம் செய்த மாற்றங்களை சேமிக்காமல் அந்த கோப்பை மூடி விடுவார்கள்.

சரி, இப்பொழுது உங்களுக்கும் அதுபோல் வேர்டில் சோதனைக்காக சில சாம்பிள் வரிகள் தேவைப்படும் பொழுது என்ன செய்யலாம்? இலகுவாக ஒரு சுருக்கு வழி இருக்கிறது. ஒரு புது வரியில் பின்வருமாறு தட்டச்சு செய்து என்டர் விசையை அழுத்துங்கள்.

=rand()

நீங்கள் எண்டர் விசையை அழுத்திய மாத்திரத்தில் “The quick brown fox jumps over the lazy dog.” என்ற வரிகள் குபுக்கென்று திரையில் தோன்றுவதைப் பார்க்கலாம். நன்றாக கவனித்தீர்களானால் இது போன்ற ஐந்து வரிகளைக் கொண்ட மூன்று பத்திகள் உருவாகியிருப்பதைக் காணலாம்.

இப்படி அல்லாமல், உங்களுக்கு தேவையான எண்ணிக்கை பத்திகளும் (X), அந்த பத்திகளில் உங்களுக்கு தேவையான எண்ணிக்கை வரிகளும் (Y) வேண்டுமானால் ஒரு புது வரியில் பின்வருமாறு தட்டச்சித்து எண்டர் விசையை அழுத்துங்கள்.

=rand(X,Y)

இங்கே X என்பதும் Y என்பதும் எண்ணிக்கையை குறிக்கும். உதாரணமாக உங்களுக்கு 15 வரிகளைக் கொண்ட 10 பத்திகள் வேண்டுமானால் =rand(10,15) என்று தட்டச்சித்து எண்டர் விசையை அழுத்தவும்.

இப்பொழுது அதே சாம்பிள் வரிகள், உங்கள் தேவைக்கேற்ப பத்திகளாய் உருவாகி இருப்பதை காண்பீர்கள்.

இந்த வசதி வேர்டு 97 ற்கு மேல் உள்ள பதிப்புகளில் உள்ளது. வேர்டு 97 முதல் வேர்டு 2003 வரை வரிகளின் அமைப்பு மேலே கூறியவாறு இருக்கும். வேர்டு 2007 மற்றும் 2010 பதிப்புகளில் =rand() என்று தட்டச்சித்து எண்டர் விசையை அழுத்தினால் பின்வருமாறு சாம்பிள் வரிகள் உருவாகும்:

On the Insert tab, the galleries include items that are designed to coordinate with the overall look of your document. You can use these galleries to insert tables, headers, footers, lists, cover pages, and other document building blocks. When you create pictures, charts, or diagrams, they also coordinate with your current document look.

You can easily change the formatting of selected text in the document text by choosing a look for the selected text from the Quick Styles gallery on the Home tab. You can also format text directly by using the other controls on the Home tab. Most controls offer a choice of using the look from the current theme or using a format that you specify directly.

To change the overall look of your document, choose new Theme elements on the Page Layout tab. To change the looks available in the Quick Style gallery, use the Change Current Quick Style Set command. Both the Themes gallery and the Quick Styles gallery provide reset commands so that you can always restore the look of your document to the original contained in your current template.

வேர்டு 2007 & 2010 பதிப்புகளில் உங்களுக்கு ”The quick brown fox jumps over the lazy dog.” என்ற வரிகள் தான் வேண்டும் என்றால் =rand.old() என்று தட்டச்சித்து எண்டர் விசையை அழுத்தவும்.

இனி நீங்களும் பிரின்டரை சோதிப்பது, பி.டி.எஃப். ரைட்டரை சோதிப்பது, ஈமெயில் அட்டாச்மென்டை சோதிப்பது போன்ற காரியங்களுக்கு இந்த யுக்தியை கையாளலாம்.

பி.கு:  வேர்டு 2007 அல்லது 2010 பதிப்பு வைத்திருப்போர் =lorem() என்று தட்டச்சித்து எண்டர் விசையை அழுத்திப் பார்க்கவும்!

Advertisements

2 பதில்கள் to “வேர்டு: ஹலோ டெஸ்டிங்!”

  1. S.Arulraj said

    Thanks for =rand.old() command.

    • The quick brown fox jumps over the lazy dog என்கிற சிறிய வரியில் a முதல் z வரை எல்லா எழுத்துக்களும் அமையப் பெற்றுள்ளது! அதனாலேயே பலரும் இந்த வாசகத்தை உபயோகிக்க விரும்புவார்கள். மைக்ரோசாஃப்ட் இன்ஜினீயர்களும் இதற்கு விதி விலக்கு அல்ல. அதனாலேயே புதிய rand ஃபன்க்‌ஷன் உருவாக்கப்பட்ட பிறகும் பழைய rand ஃபன்க்‌ஷனை rand.old என்ற பெயருடன் தொடர்ந்து வேர்டில் இடம்பெறச் செய்துள்ளார்கள்!
      தங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி அருள்ராஜ் அவர்களே!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: