கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

இறுக்குங்கள் இணையத்தை! பரீட்சை வருகிறது!

Posted by Clement மேல் பிப்ரவரி 16, 2011


“பரீட்சை நெருங்கிக்கிட்டே வருது, நம்ம பயப் புள்ளைங்களுக்கு கவலையே இல்லே! ஸ்கூல்லேர்ந்து வந்ததிலிருந்து, நான் வீட்டுக்குப் போகுற வரைக்கும் கம்ப்யூட்டர் முன்னே தான் இருக்கானுங்க. என்னமோ எஃப்.பி – ங்குறான், ட்விட்டர் – ங்குறான், என்ன பண்ணுறானுங்கன்னே தெரியலே. எனக்கும் என்ன பண்ணுறதுன்னே புரியலே….” என்று ஒருவர் தன் புலம்பலை தேனீர் வேளையில் ஆரம்பிக்க, சற்று நேரத்திற்கெல்லாம்  அது தேனீரைவிட சூடான டாபிக் ஆகிவிட்டது.

“கம்ப்யூட்டர் மூலமா வருகிற பிரச்சினைய கம்ப்யூட்டர் மூலமா தான் தீக்கணும். கம்ப்யூட்டரிலே யார் யார் என்னென்ன காரியம் எவ்வளவு நேரம் செய்யலாங்கறத  கன்ட்ரோல் பண்ற மாதிரி சாஃப்ட்வேர் இருக்கிறதா அமெரிக்கவிலே இருக்கிற என் கோ-பிரதர் சொன்னார்…” என்று ஒருவர் சொல்ல, கவனம் என் பக்கம் திரும்பியது.

நானும் நெட் நேன்னி என்றெல்லாம் கெள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அதெல்லாம் இலவச மென்பொருள் இல்லை. அதுமட்டுமல்லாது இதுபோன்ற மென்பொருட்கள் பொதுவாக இலவசமாக கிடைக்காது. அப்படியே இலவசமாக தருவதாக கூறினாலும், நம்பகமானதாக இருக்குமா என்று சந்தேகமே, அதாவது ஸ்பைவேர் ஏதாவது இருக்கலாம் என்று அப்போதைக்கு கூறி வைத்தேன்.

தேனீர் அருந்தியவாறே கூகிளில் தேடிய பொழுதும், நான் கூறியவாறே நம்பத் தகுந்தவாறு எதுவும் இலவசமாக கிட்டவில்லை.

இருந்தாலும் எனக்குள் ஒரு கேள்வி. இதற்கென ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மென்பொருளோ, இலவச மென்பொருளோ இருக்காதா என்ன?

நன்றாக தேடித்தான் பார்ப்போமே என்று இரவு உணவிற்குப் பின் அமர்ந்து அலசியபொழுது இவை இரண்டு கண்ணில் பட்டது.

1. ஃபிரீ இன்டர்நெட் செக்யூரிட்டி கன்ட்ரோலர்

இது குனு ஜிபிஎல் லைசென்சின் கீழ் வெளியிடப்படுகிறது. இதற்கான ஸோர்ஸ்ஃபோர்ஜ் பக்கத்தை இங்கே காணலாம்.

http://sourceforge.net/projects/fisecurity/

2. கே9 வெப் புரொடெக்ஷன்

இது வீட்டு உபயோகத்திற்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இலவச உபயோகமாக இருந்தாலும், இதற்கு ஒரு லைசென்ஸ் தேவைப்படுகிறது. உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளித்தால், சற்று நேரத்திற்கெல்லாம் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு லைசென்ஸ் வழங்கப் படும் என்று அறிவிக்கிறது இந்த பக்கம்.

http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free

வீட்டில் தற்பொழுது லீனக்ஸ் உபயோகிக்கிறேன் என்பதால் உடனே நிறுவிப் பார்க்க வில்லை. (ஸ்கிரீன்ஷாட் அந்த இணைய தளத்திலிருந்தே பதிவிறக்கம் செய்யப்பட்டது!)

தேவைப்படுபவர்கள் நிறுவி உபயோகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனுபவம், மற்றும் மேலும் தகவல் அறிந்தால் பின்னூட்டம் அளிக்கவும். எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: