கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

விண்டோஸில் இருந்து யூனிக்ஸ் – “பட்டி”

Posted by Clement மேல் பிப்ரவரி 14, 2011


என்னுடைய “என்னோடு எப்போதும்…” தொடர் பதிவிற்கான இடுகையில் நான் உபயோகிக்கும் இலவச செயலிகளின் பட்டியலின் கடைசியில் “புட்டி” என்று குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்த நண்பர் ஒருவர் “ஓ! உனக்கு இந்தப் பழக்கம் கூட இருக்கா? இன்னைக்கு சாயந்திரம் நீ ஃபிரீயா? என்று “நைஷாக விஷாரித்தவுடன்” சற்று உஷாரானேன். உமக்கெல்லாம் அவ்வளவு லேசில் எங்கே தெரி(ளி)யப் போகிறது! அது ஒரு டெல்நெட் கிளையண்டாக்கும்! விண்டோஸில் உள்ள டெல்நெட் கிளையண்டை விட சூப்பராக்கும்! அதுவாக்கும்.. இதுவாக்கும்.. என்று ஏகமாய் அவரை குழப்பி ஒரு வழியாய் தப்பித்தேன். இருந்தாலும் எனக்குள் ஒரு சந்தேகம். இவ்வளவு நாட்களாக நான் “புட்டி” என்று நினைத்துக் கொண்டிருந்தது சரியா? உடனே இணையத்தில் தேடி என் சந்தேகத்திற்கு விடை தெரிந்து கொண்டேன். “புட்டி” என்பதை விட “பட்டி” என்பதே சரி. இதற்கான அதிகாரபூர்வமான விளக்கத்தை இங்கே காணலாம்.

//   A.10.4 How do I pronounce ‘PuTTY’?

//  Exactly like the English word ‘putty’, which we pronounce /ˈpʌti/.

சரி. இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். “பட்டி” என்பது ஒரு டெல்நெட் கிளையண்டு ஆகும். இது ரா, எஸ்.எஸ்.ஹெச், டென்நெட், ஆர்லாகின் மற்றும் சீரியல் வகை இணைப்புகளில் வேலை செய்ய வல்லது. பட்டி வாயிலாக விண்டோஸில் இருந்து கொண்டு ஒரு யூனிக்ஸ் கணினியில் நாம் வேலை செய்யலாம். என்னுடைய இலவச யூனிக்ஸ் ஷெல் அக்கவுண்டு பதிவில் குறிப்பிட்டிருந்த எஸ்.டி.எஃப் மற்றும் கிரெக்ஸ் அக்கவுண்டுகளில் லாகின் செய்து உபயோகிக்க இந்த கிளையண்டு மிகவும் உதவியாக இருக்கும்.

மைக்ரோசாஃப்ட் டெல்நெட் விண்டோஸிலேயே உள்ளது. ஆனால் அதில் கிராஃபிகல் யூசர் இன்டர்ஃபேஸ் கிடையாது. பட்டியில் வசதியான கிராஃபிகல் யூசர் இன்டர்ஃபேஸ் உள்ளது.

இதில் பல இணைப்புகளின் செட்டிங்குகளை வசதியாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இதை இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Advertisements

ஒரு பதில் to “விண்டோஸில் இருந்து யூனிக்ஸ் – “பட்டி””

  1. பட்டியோ புட்டியோ குட்டியான விஷயத்தை கெட்டியாக புரியவைத்து விட்டீர்கள் போங்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: