கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

டர்போ சி பிளஸ் பிளஸ்

Posted by Clement மேல் பிப்ரவரி 10, 2011


நண்பர் ஒருவர், தன் மகள் பழகுவதற்காக தன் வீட்டுக் கணினியில் டர்போ சி பிளஸ் பிளஸ் நிறுவ வேண்டும் எனவும், அதற்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ள, அதன் வழிமுறைகளை இங்கே கொடுக்கிறேன்.

1. முதலில் ”டர்போ சி பிளஸ் பிளஸ்” மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

2. ஜிப் கோப்பான அதை தற்காலிகமாக ஒரு ஃபோல்டரில் அன்-ஜிப் செய்து கொள்ளவும்.  உ.ம். c:\temp\tcpp101

3. அந்த ஃபோல்டரில் இருந்து INSTALL.EXE என்ற கோப்பை இயக்கவும்.

4. சோர்ஸ் டிரைவ் அதாவது நீங்கள் அன்-ஜிப் செய்து வைத்துள்ள டிரைவ் எது என்று உள்ளீடு செய்யவும். நான் c:\temp\tcpp101 என்ற ஃபோல்டரில் அன்-ஜிப் செய்து இருந்ததால் ”C” என்று உள்ளீடு செய்தேன்.

5. அடுத்த திரையில், INSTALL.EXE இருக்கும் ஃபோல்டர் தானாகவே காட்டப்படும் அப்படியே எண்டர்-கீ ஐ அழுத்தவும்.

6. அடுத்த திரையில் நிறைய ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். எந்த ஆப்ஷனையும் மாற்றத் தேவையில்லை. அப்படியே F9 விசையை அழுத்தவும். இப்பொழுது டர்போ சி பிளஸ் பிளஸ் கணினியில் நிறுவப்பட்டு விடும்.

7. இன்னும் ஒரே ஒரு வேலை தான் பாக்கி இருக்கிறது. அதாவது கமாண்ட் பிராம்ப்ட்-இல் எந்த ஃபோல்டரில் இருந்து கொண்டும் TC என்று தட்டச்சித்து எண்டர் அழுத்தினால் டர்போ சி பிளஸ் பிளஸ் வேலை செய்ய வேண்டும்.

அதற்கு PATH  வேரியபிளில் C:\TC\BIN என்று சேர்க்க வேண்டும். அதுவும் PATH வேரியபிளில் ஏற்கனவே என்ன இருந்தாலும் அது கெட்டுப்போகாமல் அதனுடன் C:\TC\BIN என்பதை கூடுதலாக இணைக்க வேண்டும். PATH வேரியபிளின் கடைசியில் ஒரு செமி கோலன் உள்ளீடு செய்து அதன் பின் C:\TC\BIN என்று உள்ளீடு செய்யுங்கள்.

8. இப்பொழுது இந்த PATH வேரியபிள் மெமரியில் அப்டேட் ஆவதற்காக கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யவும்.

அவ்வளவுதான்! டர்போ சி பிளஸ் பிளஸ் தயார்!!

Advertisements

4 பதில்கள் to “டர்போ சி பிளஸ் பிளஸ்”

 1. இந்த மென்பொருளினால் என்ன பயன் ?

  athiradiminnal@gmail.com plz

  • பயன்:
   இந்த மென்பொருள் பள்ளி மாணவர்கள் சி மற்றும் சி++ புரோகிராமிங் மொழிகளை பழகுவதற்கு உதவும்.
   மேலும் சில குறிப்புகள்:
   மைக்ரோசாஃப்ட் டாஸ் புழக்கத்தில் இருந்த காலத்தில், டர்பொ சி/சி++ புரோகிராமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. விண்டோஸ் வந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் போர்லேண்ட் நிறுவனம், கணினி கல்வியில் உதவுவதற்காக இந்த மென்பொருளை பொது உடமையாக்கி இலவச உபயோகத்திற்கு கொடுத்துவிட்டது. அதன் பின் சில ஆன்டுகளுக்கு போர்லேண்ட் நிறுவனத்தின் இணையதளத்தில், டவுன்லோடு பகுதியில் இந்த மென்பொருள் கிடைக்கப்பெற்று வந்தது. தற்போது போர்லேண்ட் நிறுவனத்தின் இணையதளத்தில் இது இல்லையென்றாலும் வேறு சில பதிவிறக்க தளங்களில் கிடைக்கத்தான் செய்கிறது.

   தங்கள் வருகைக்கும், வினாவிற்கும் மிக்க நன்றி!

 2. விளக்கப் படங்களுடன் தெளிவான கட்டுரை அளித்ததற்கு நன்றி. இலவசமாக கிடைக்கும் திறமூல மென்பொருட்களான Anjuta C/C++ IDE, Eclipse C/C++ IDE… போன்றவற்றையும் பயன்படுத்தலாம். போர்லாண்ட் சி++ ரொம்ப பழசு சார். எக்லிப்ஸ் நிரலாக்கத்தை எளிமைப்படுத்தும் அருமையான மென்பொருள்.

  • நீங்கள் சொல்வது உண்மைதான்! புரோக்கிராம் எழுதுபவர்கள் தற்கால மென்பொருட்களையே உபயோகிப்பது நல்லது.
   ஆனால் இப்பதிவு செய்யக் காரணம், சக ஊழியரின் மகள், தன் பள்ளிக்கூடத்தில் சி கற்றுக்கொடுக்க உபயோகப்படுத்தின மென்பொருளை வைத்தே வீட்டிலும் பழக நினைத்ததுதான். டிசிபிபி-ஐ பென் டிரைவில் காப்பி செய்து கொடுத்தனுப்பியும் அதை கணினியில் நிறுவுவதற்கு அவள் சற்று தடுமாறியதாலேயே இப்பதிவு!
   நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பதிவிட காரணமாகவும் இது அமைந்தது.
   தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: