கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

இலவச யூனிக்ஸ் ஷெல் அக்கவுண்டு

Posted by Clement மேல் ஒக்ரோபர் 31, 2008


முன்பொரு ஒரு சமயத்தில் எனக்கு அவ்வப்பொழுது பரீட்சார்த்தமான சிறு சிறு சோதனைகள்  செய்து பார்க்க (விளையாட்டாக செய்து பார்க்க) ஒரு தற்காலிக யூனிக்ஸ் அக்கவுண்டு தேவைப்பட்டது. இலவச யூனிக்ஸ் ஷெல் அக்கவுண்டு என்று ஆங்கிலத்தில் கூகிளில் தேடினால் பல தளங்களின் முகவரி கிடைத்தது. நானும் ஒரு சிலவற்றை முயற்சி செய்து பார்த்தேன். இந்த இலவச சேவையை வழங்கும் பெரும்பான்மையான தளங்களில் உள்ள குறைபாடு என்னவென்றால் நம்பகமான சேவை இல்லாததுதான்.  சில சமயம் வேலை செய்யும்; பல சமயம் வேலை செய்யாது; சில மாதங்கள் கழித்து அந்த தளமே காணாமல் சென்றுவிடும்! இவ்வாறான சேவை நடத்துவதில் வர்த்தக ரீதியான இலாபம் ஏதும் இல்லாததால், வெறும் சேவை மனப்பான்மையையே நம்பியிருக்கிறது இச்சேவைகள். இத்தகைய சேவை நடத்த முற்படுவோரில் பெரும்பாலானவர்கள், உபயோகமற்று கிடக்கும் மிகப் பழைய கணினிகளைக் கொண்டே இச்சேவைகளை துவக்குகின்றனர். கணினி பழுதுபட்டால் சேவையும் பழுதுதான்!

என்னுடைய தேவை, நான் விரும்பும் பொழுது ஒரு ஷெல் சேவையை உபயோகிக்க வேண்டும். அவ்வளவுதான்! பலவற்றை ஆராய்ந்த பின், இரண்டு சேவைகளை உபயோகித்திருக்கிறேன். அவை:

 1. எஸ்.டி.எஃப்
 2. கிரெக்ஸ்

இந்த இரண்டு சேவைகளும் வழங்கும் வசதிகள் ஒன்றிற்கு ஒன்று சற்று வித்தியாசப்படும்.  இரண்டிலுமே அக்கவுண்டு தொடங்கி தேவைக்கேற்ப உபயோகித்துக் கொள்ளலாம். புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு சற்று கூடுதலாக கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். ஹேக்கர்கள் மற்றும் நாசம் செய்ய முற்படுவோரிடமிருந்து சிஸ்டத்தை காப்பதற்காகவே இந்த ஏற்பாடு. புதிய பயனர் அவ்வாறானவர் அல்ல என்று அறிந்த பின்னர் (வேலிடேட் செய்யப்பட்ட பின்) அதிக வசதிகள் பெறலாம். (நமக்கென்று மின்னஞ்சல் மற்றும் இணைய தளம் கூட உண்டு!)

யூனிக்ஸ் புதிதாக பழகுபவர்கள், விண்டோஸ் சூழலில் இருக்கும் பொழுது யூனிக்ஸில் சிறு சிறு சோதனைகள் செய்து பார்க்க விரும்புவோர், மற்றும் ஆர்வலர் யாவரும் உபயோகிக்க வசதியானதாகும் இந்த இலவச ஷெல் அக்கவுண்டுகள். நீங்களும் ஒரு கணக்கு இன்றே துவங்கிப் பாருங்களேன்!

Advertisements

3 பதில்கள் to “இலவச யூனிக்ஸ் ஷெல் அக்கவுண்டு”

 1. மோகன் said

  தகவலுக்கு நன்றி அமிர்தராஜ் அய்யா. தற்போது பெரும்பாலான லினக்ஸ் “Live CD” தருகிறார்கள்.. அதை வைத்து நீங்கள் உங்கள் கணினியில் லினக்ஸ் நிறுவாமலேயே லினக்ஸ் உபயோகப்படுத்திப் பார்க்கலாம். அதே போன்று நிறைய Virtualization(like vmware) மென்பொருட்கள் உள்ளன. அதை வைத்தும் நீங்கள் விண்டோசிலிருந்தே லினக்ஸ் லைவ் சிடி அல்லது லினக்ஸ் நிறுவி உபயோகிக்கலாம். இது உங்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் மன்னிக்கவும்.

 2. உண்மைதான்! லைவ் சி.டி. / வி.எம்.வேர் + லீனக்ஸ் / சிக்வின் போன்றவற்றின் உதவியுடன் நம் விருப்பம் போல் உபயோகிக்கலாம். இலவச ஷெல் அக்கவுண்டுகளில் இருக்கும் கட்டுப்பாடுகள் இவற்றில் இருக்காது. தீவிரமாக யூனிக்ஸ் கற்றுக் கொள்பவர்களுக்கு இவைகளே சிறந்ததாகும்.
  எஸ்.டி.எஃப் போன்ற சர்வரில் கிடைக்கும் அக்கவுண்டில் வேறு சில அம்சங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு:
  மின்னஞ்சல் – எ.கா. yourname@sdf.lonestar.org
  இணைய தளம் – எ.கா. yourname.freeshell.org (கிரெக்ஸ் இல் ஒரு முறை PHP CMS நிறுவி பார்த்திருக்கிறேன்)
  புல்லெட்டின் போர்டு

  தங்கள் வருகைக்கும் குறிப்புகளுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள். தகவல்களை பகிர்ந்து கொள்வோம்.
  நல்வாழ்த்துக்கள்.

 3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  இதைப் பாருங்கள் 🙂
  http://blogintamil.blogspot.com/2009/01/2009.html

  தொடருங்கள் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: