கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

ஓப்பன் ஆஃபீஸ் 3

Posted by Clement மேல் ஒக்ரோபர் 21, 2008


கணினியில் அலுவலகக் கூட்டு மென்பொருளின் பங்கு

கணினியில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் மென்பொருட்களுள்,  ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அடுத்து முக்கியமான இடத்தை பிடிக்கும் மென்பொருள் அலுவகலகக் கூட்டாகத்தான் (ஆஃபீஸ் ஸூட்) இருக்கும். நாம் அன்றாடம் தகவல்களை ஆவண வடிவாக்கி சேமிக்கவும், ஆராயவும், பகிரவும் உதவுவது அலுவலகக் கூட்டு மென்பொருளே. இவ்வகையான கூட்டு மென்பொருட்களுள் இலவசமாக கிடைப்பதில் முன்னணியில் இருப்பது ஓப்பன் ஆஃபீஸ் அலுவலக மென்பொருள் கூட்டேயாகும்.

ஓப்பன் ஆஃபீஸ் 3 வெளியீட்டிற்கு அமோக வரவேற்பு!

ஓப்பன் ஆஃபீஸின் புதிய பதிப்பான 3 (வெர்ஷன் 3), பலரும் வெகு நாட்களாக (மாதங்களாக?) எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெளியீடு. நானும் அப்படித்தான். அக்டோபர் 13 வெளியிடப்படுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் 13 ஆம் தேதி பதிவிறக்கம் செய்ய முயற்சித்த எனக்கு ஏமாற்றம் தான். http://www.openoffice.org தளத்தை திறக்க முயற்சித்து தோல்வியுற்றது எனது பிரவுசர். இலட்சக்கணக்காண பிரவுசர்களின் ஒருமித்த முயற்சியால் முடங்கியிருந்தது தளம். திரும்பவும் 14 ஆம் முயற்சித்தால், வழக்கமான  முதற்பக்கத்தை காணவில்லை. எடுத்தவுடன் டவுன்லோடு பக்கம் தான் தெரிந்தது. வழக்கமான தளம் அதிகமான வரவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால் தற்காலிகமாக இந்த அமைப்பு செய்திருந்தார்கள். அவ்வளவு வரவேற்பு இந்த வெளியீட்டிற்கு.

அப்படி என்னதான் இருக்கிறது இந்த ஓப்பன் ஆஃபீஸில்?

நிறைய பணம் கொடுத்து வாங்கும் (உண்மையாகவா?) முன்னணி மென்பொருட்களுடன் ஒப்பிடும் பொழுது, விசேஷமாக சொல்லும் அளவிற்கு பெரியதாக ஒன்றுமில்லை! ஆனால் நமது அன்றாட ஆவணத் தேவைகளை மிகவும் அலட்டிக் கொள்ளாமல் நேர்த்தியாக பூர்த்தி செய்ய வல்லது இந்த மென்பொருள்.

ஸ்டார்ட் சென்டர்

ஸ்டார்ட் சென்டர்

ஓப்பன் ஆஃபீஸின் கூறுகள்

  • ரைட்டர்: டாக்குமென்டுகளை தயாரித்து ஆள உதவுகிறது.
  • கேல்க்: ஸ்பிரெட்ஷீட்டுகளை தயாரித்து ஆள உதவுகிறது.
  • இம்பிரஸ்: பிரசென்டேஷன்களை தயாரித்து ஆள உதவுகிறது.
  • பேஸ்: டாட்டாபேஸ்களை தயாரித்து ஆள உதவுகிறது.
  • டிரா: வரை படங்களை தயாரித்து ஆள உதவுகிறது.
  • மேத்: கணித சூத்திரங்களைத் தயாரிக்கவும்,  அவற்றை ஆவணங்களுக்குள் பதித்து ஆளவும் உதவுகிறது.

அண்மைய பதிப்பில் உள்ள மேம்பாடுகள்

இதற்கு முந்தய பதிப்பு வெளியாகி ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குப் பின் வந்துள்ள இந்தப் பதிப்பில் நான் எதிர்பார்த்த அளவு மேம்பாடுகள் இல்லை என்றாலும், ஏற்கனவே இருந்த வசதிகளை சற்று மெருகூட்டியும், ஒரு சில புதிய வசதிகளை அறிமுகப் படுத்தியும் இருக்கிறார்கள். புதியவற்றுள் முதலில் கண்களில் படுவது ஜூம் ஸ்லைடர்; எளிதாக கண்களில் அகப்படாதவற்றில் முன்னிற்பது நோட்ஸ் [இன்ஸர்ட் >> நோட்ஸ்].  இந்த பதிப்பை திறந்தவுடன் தெரியும் மேம்பாடு இதன் ஸ்டார்ட் சென்டர் தான். இது பார்வைக்கு அழகாக மட்டுமல்லாமல் வசதியாகவும் இருக்கிறது.

ஜூம் ஸ்லைடர்

ஜூம் ஸ்லைடர்

நோட்ஸ்

நோட்ஸ்

நூறு சதவிகிதம் இலவசம்!

நீங்கள் இலவச லீனக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உபயோகிப்பவராக இருந்தாலும் சரி, கணினியுடன் சேர்த்து விண்டோஸ் வாங்குபவராக இருந்தாலும் சரி, அல்லது பணம் கொடுத்து விண்டோஸ் வாங்கி கணினியில் நிறுவும் ஆசாமியாக இருந்தாலும் சரி, ஒரு ஆஃபீஸ் சூட்டிற்காக மேலும் பணம் செலவழிக்கத் தேவையில்லை. ஓப்பன் ஆஃபீஸ் செயலியானது லீனக்ஸ், சோலாரிஸ், விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ் இயங்கு தளங்களில் (ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில்)  இயங்க வல்ல முற்றிலும் இலவச மென்பொருளாகும்.

பிற ஆஃபீஸ் செயலிகளுடன் ஒத்திசைவு

ஓப்பன் ஆஃபீஸ் “ஓப்பன் டாக்குமென்ட் ஃபார்மேட்” எனும் சர்வதேச ஆவண கோட்பாட்டை ஒத்திசைந்து செயல்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, எம்.எஸ் ஆஃபீஸ் டாக்குமென்டுகளுடன் ஒத்திசைவு இருக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஆவணங்களை எம்.எஸ் ஆஃபீஸ்  ஃபார்மேட்டில் சேமிக்கலாம் / எம்.எஸ் ஆஃபீஸ் ஆவணங்களை திறக்கலாம். எம்.எஸ் ஆஃபீஸுடன் நூறு சதவிகிதம் ஒத்திசைவு இல்லாவிட்டாலும், அடிப்படை ஃபார்மேட்டுகளுடன் கூடிய ஆவணங்களை இவ்விரண்டு ஆஃபீஸ் சூட்கள் இடையிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

தமிழில் ஆவணங்கள்!

யூனிகோட் எழுத்துரு வாயிலாக தமிழ் ஆவணங்களை இயற்றும் / கையாளும் வசதி ஓப்பன் ஆஃபீஸின் முந்தைய பதிப்புகளிலிருந்தே இருக்கிறது. அது மட்டுமல்லாது “தமிழ் – ஓப்பன் ஆஃபீஸ்” எனும் ஒப்பன் ஆஃபீஸ்.ஆர்க் இன் துணைத் திட்டமும் தமிழ் ஓப்பன் ஆஃபீஸ் குழுவினரின் முயற்சியால் நடைமுறையில் இருக்கிறது.

இன்றே பதிறக்கம் செய்வீர்!

இதற்கு மேல் வேறென்ன வேண்டும்? இன்றே பதிவிறக்கம் செய்து (142 மெகா பைட்டுகள்) உபயோகித்துப் பாருங்கள்!

ஓப்பன் ஆஃபீஸ் தளம் ஆங்கிலத்தில்:http://www.openoffice.org/

ஓப்பன் ஆஃபீஸ் தளம் தமிழில்: http://ta.openoffice.org/

Advertisements

ஒரு பதில் to “ஓப்பன் ஆஃபீஸ் 3”

  1. இலவசமாக கொடுக்கப்படும் மென்பொருளில் இத்தனை வசதிகளா? இந்த திறந்த அலுவலகத்தில் (சும்மா நம்ப ஓப்பன் ஆபீஸ் தான்) பணிபுரிய மிகவும் ஆசை வந்துவிட்டது. இது ஆரம்பித்துவிட்டேன் ஓப்பன் ஆபீஸை தரவிறக்கம் செய்ய…. செய்திகளுக்கு நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: