விண்டோஸில் இருந்தே யூனிக்ஸ் பழகுங்கள்!
Posted by Clement மேல் ஒக்ரோபர் 7, 2008
கணினி கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலானவர்களுக்கு யூனிக்ஸ் அல்லது லீனக்ஸ் இயங்குதளத்தில் பயிற்சி பெறுவது தேவையாகிறது. கல்லூரிகளில் இதற்கான வசதி இருந்தாலும் வீட்டுக் கணினியில் பயிற்சி செய்து பார்க்க வேண்டும் என்றால் விண்டோஸ் மட்டுமே நிறுவப்பட்ட கணினியில் சற்று சிக்கல் தான். கணினியை டூயல் பூட் செய்யுமாறு அமைத்து லீனக்ஸ் நிறுவ வேண்டும். லீனக்ஸ் ஆர்வலர்கள் பலருக்கும் இது ஒன்றும் பெரிய விஷயமாக இல்லாமல் இருந்தாலும், பரீட்சையின் போது மட்டும் யூனிக்ஸ் பழகினால் போதும் என்று நினைக்கும் விண்டோஸ் விரும்பிகள் என்ன செய்வது?
இதற்கு சரியான தீர்வு சிக்வின் (Cygwin) உபயோகிப்பது தான். சிக்வின் என்பது விண்டோஸில் இயங்கும் ஒரு லீனக்ஸ் எமுலேட்டர் ஆகும். அதாவது இது முழுமையான லீனக்ஸ் அல்ல; ஆனால் லீனக்ஸ் “மாதிரி” ஒரு சூழலை நமக்கு உருவாக்கி கொடுக்கும்.
இந்த சிக்வின் எமுலேட்டரை கணினியில் நிறுவ, சிக்வின் செட்-அப் செயலியை http://cygwin.com/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த செட்-அப் செயலி அரை மெகாபைட்டுக்கும் குறைவான அளவிலான ஒரு கோப்பு ஆகும். இதை இயக்கியபின் பல தெரிவுகளை தேர்ந்தெடுப்பதன் மூலம் நமக்கு தேவையான பேக்கேஜுகளை (வசதிகளை) நிறுவிக் கொள்ளலாம். இந்த பேக்கேஜுகள் பல நூறு மெகாபைட்டுகள் அளவிலானதாகும். தேவையானவர்றை மட்டும் தெரிவு செய்யவும். இதன் டிபால்டு தெரிவு மிகக் குறைந்த அளவிலான பேக்கேஜுகளையே கொண்டிருக்கும். அடிப்படை கமாண்டுகளை பழகிப் பார்க்க இது போதுமானதாகும். சற்று கூடுதல் வசதிகள் வேண்டுமானால் (டெக்ஸ்டு எடிட்டர்கள் கூட டிபால்டு தெரிவில் இருக்காது!) நாம் தான் தேவையானவற்றை தெரிவு செய்து கொள்ள வேண்டும். இந்த செட்-அப் புரோகிராமை நமக்கு தேவையான பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் இயக்கி பேக்கேஜுகளை தேவைக்கேற்ப நிறுவிக்கொள்ளலாம்.
மாணவர்கள் மட்டுமன்றி கணினிப் பொறியாளர்களும் தங்கள் ஆராய்ச்சி/சோதனை பணிகளுக்கேற்ப உபயோகப்படுத்துமாறு பல பேக்கெஜுகள் இதில் உள்ளன. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்!
சுபாஷ் said
மிக உபயோகமான பதிவு ஐயா.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
இதேபோல் Sun Solaris ற்கான Emulators பற்றி தகவல் தர முடியுமா?
WM Ware இதனோடு ஒத்துப்போவது குறைவு.
நன்றி
செந்தழல் ரவி said
நல்ல பதிவு..!!! நன்றி !!!
Suresh M said
Hi,
Good information. Keep it up. If possible, post most details about cygwin.
அமிர்தராஜ் said
சுபாஷிற்கு,
சோலாரிஸ் எமுலேட்டர் பற்றி இதுவரை நான் அறியவில்லை.
1. கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தளங்களையும் பாருங்கள். (இவைகளை நான் முயற்சித்துப் பார்த்ததில்லை)
http://www.opensolaris.org/os/
http://www.openxvm.org/projects.html
2. சோலாரிஸ் செர்வரில் அக்கவுண்டு வாங்குங்கள்
போலாரிஸ் ஹோம் எனும் தளத்தில் அக்கவுண்டு தருகிறார்கள். சோலாரிஸ் அக்கவுண்டு பெற இங்கே சொடுக்குங்கள்.
இலவசமாக டெம்பிலேட் அக்கவுண்டு எனும் அக்கவுண்டும், 2 டாலர் பணம் செலுத்தி ஷெல் அக்கவுண்டு எனும் அக்கவுண்டும் தருகிறார்கள்.
(இதையும் நான் முயன்று பார்த்ததில்லை)
முயற்சி செய்து பாருங்கள்!
உங்கள் தேவை பூர்த்தியடைய நல்வாழ்த்துக்கள்!
சுபாஷ் said
மிக்க நன்றி அமிர்தராஜ் .
முயற்சித்துப்பார்க்கிறேன்
ஜே கே said
பயனுள்ள தகவல் நன்றி.
suuriyan said
நான் இப்போது பெரும்பாலும் விண்டோஸ் பயன்படுத்துகின்றென்.
நான் எளிதாக யுனிக்ஸ் பழக முடியுமா?
அமிர்தராஜ் said
சூரியனுக்கு,
// நான் எளிதாக யுனிக்ஸ் பழக முடியுமா?
(எளிதாக?)முடியும். http://rute.2038bug.com/index.html.gz என்ற தளம் பார்க்கவும்.
வாழ்த்துக்கள்!