கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

தனித்தளமாக கூகிள் காண்டேக்டு மேனேஜர்

Posted by Clement மேல் ஒக்ரோபர் 6, 2008


பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், நமக்கு தேவையான மின்னஞ்சல் முகவரிகளை சேமித்து வைத்துக் கொள்ள வசதி இருக்கும். அதேபோல் ஜிமெயிலிலும் காண்டேக்ட்ஸ் வசதி உள்ளது. ஜிமெயில் உபயோகிப்பவர்கள் இந்த வசதியை உபயோகித்திருப்பார்கள். ஜிமெயில் தளத்தில் காண்டேக்ட்ஸ் எனும் தொடுப்பை தெரிவு செய்யும் பொழுது, படத்தில் உள்ளது போல் காண்டேக்ட்ஸ் இன்டர்ஃபேஸ் ஜிமெயிலினுள் தெரியும்.

ஜிமெயில் காண்டேக்ட்ஸ்

ஜிமெயில் காண்டேக்ட்ஸ்

இந்த காண்டேக்ட்ஸ் வசதியை ஜிமெயில் தளத்தின் வாயிலாக அல்லாமல் தனிப்பட்ட ஒரு தளமாகவும் உபயோகிக்க இயலும். கூகிளில் புகுபதிவு (sign-in) செய்தபின் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பை சொடுக்கினால் கூகிள் காண்டேக்டு மேனேஜர் (பெயரை கவனிக்கவும்: ஜிமெயில் காண்டேக்ட்ஸ் அல்ல; கூகிள் காண்டேக்டு மேனேஜர்) தனித்தளமாக தெரியும்.
http://mail.google.com/mail/contacts/ui/ContactManager
இங்கே கவனிக்க வேண்டியது கூகிளினுள் புகுபதிவு செய்யாமல் இந்த தளத்தை காண இயலாது (404 பிழை செய்தி காண்பிக்கப்படும்). இதற்கென தனியாக லாகின் ஸ்கிரீனை கூகிள் வடிவமைக்காததால் google.co.in (அல்லது கூகிள் குடும்பத்தை சார்ந்த ஒரு தளம்) இணைய பக்கத்தில் உள்ள sign-in தொடுப்பை உபயோகித்து புகுபதிவு செய்த பின் முயற்சிக்கவும்.
ஜிமெயில் காண்டேக்ட்ஸ் போலவே உள்ள இத்தளம் “கூகிள் காண்டேக்ட்ஸ்” என்ற படத்துடன் (லோகோவுடன்) காட்சியளிக்கிறது.

கூகிள் காண்டேக்டு மேனேஜர்

கூகிள் காண்டேக்டு மேனேஜர்


உபயோகித்துப் பாருங்கள்!

Advertisements

4 பதில்கள் to “தனித்தளமாக கூகிள் காண்டேக்டு மேனேஜர்”

 1. nanry.. said

  தகவலுக்கு நன்றி… முடிந்தால் thamilbest.com இல் இன்ணத்து விடுங்கள்

 2. A.HARI said

  Thanks for informative post.

  One problem in blogs is we donot know when it is updated. I have to check your blog often to see whether any news posts have been made.

  Is it possible to generate an automatic e mail to notify new posts?

  Hari

 3. ஜுர்கேன் க்ருகேர் said

  தகவலுக்கு நன்றி

 4. அமிர்தராஜ் said

  // Is it possible to generate an automatic e mail to notify new posts?
  தானாக மின்னஞ்சல் அனுப்பும் வசதி இல்லை. நானாக வேண்டுமானால் செய்யலாம். ஆதரவும் வரவேற்பும் இருக்குமானால் இதையும் செய்யலாம். அதுவரை நீங்கள் ஏதேனும் ஒரு RSS ரீடர் வாயிலாக இத்தளத்திற்கு சந்தா செய்யலாம்.
  https://kaniththuli.wordpress.com/feed/
  இத்தளத்தின் வலப்பக்க பட்டையில் இதற்கான தொடுப்பு “சந்தாசெய்” எனும் தலைப்பின் கீழ் இருப்பதை காண்க.
  தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: