கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

நம்மைச் சுற்றி நம் உலகம்

Posted by Clement மேல் செப்ரெம்பர் 24, 2008


உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவை மட்டுமே தனி ஒரு நபருக்கு அடிப்படைத் தேவை என்ற ஒரு கால கட்டத்தில் இருந்து கணினி யுகத்தினுள் வெகு தொலைவிற்கு பயணித்து விட்டோம். காணி நிலம் வேண்டும் என்ற ஆசை இந்த பூவுலகில் நிறைவேறாமல் போனாலும், டிஜிட்டல் உலகில் நமக்கென்று சில மெகாபைட்டுகளை ஒதுக்கி பாதுகாத்து வருகிறோம். இந்த சில மெகாபைட்டுகள் பல வடிவத்தில் நம்முடன் பந்தம் கொண்டுள்ளது. நமது மின்னஞ்சல் கணக்கு, வலைப்பூ தளம், அலைபேசி நினைவகம், பி.டி.ஏ, பென் டிரைவ், லேப் டாப், டெஸ்க் டாப் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இவை எல்லாவற்றிலும் மிக எளிமையாக (விலை குறைவாக) நமக்கென்று ஒரு டிஜிட்டல் உலகை அமைத்துக் கொள்ள உதவுவது பென் டிரைவ் தான். அது மட்டுமன்றி, நம் டிஜிட்டல் உலகு எப்பொழுதும் நம்முடனேயே சுற்றி வரவும் உதவுகிறது இந்த பென் டிரைவ்.

பென் டிரைவ்

பென் டிரைவ்

பென் டிரைவில் மெகாபைட்டு கணக்கில் நினைவிடம் மட்டும் இருந்தால் போதாது. நாம் அதில் பல்வேறு இரக கோப்புகளின் வடிவில் சேமித்து வைத்துள்ள தகவல்களுக்கு ஒரு அர்த்தம் அளித்து நம் வாழ்வுடன் இணைக்கவல்ல செயலிகளும் (புரோக்கிராம்கள்) நமக்கு தேவைப்படுகிறது. அவ்வாறான செயலிகள் பலவற்றை நாம் கணினியில் நிறுவி அன்றாடம் உபயோகித்து வருகின்றோம்.

ஒரே இரக செயலை செய்வதற்கு பல செயலிகள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான / பழக்கப்பட்ட செயலி உண்டு. உதாரணத்திற்கு தமிழில் வலைத்தளங்களை அலசுவதற்கும் எழுதுவதற்கும் எனக்கு பிடித்த செயலி பயர் பாக்ஸ் பிரவுசரும் தமிழ்கீ நீட்சியும். தமிழில் தட்டச்சித்து பிரிண்ட் எடுப்பதற்கு நான் உபயோகிப்பது ஓப்பன் ஆஃபீஸ் ரைட்டர். இந்த செயலிகள் நான் என் பென் டிரைவை உபயோகிக்கும் எல்லா கணினிகளிலும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது. இதற்கான தீர்வு, எனக்குத் தேவையான செயலிகளையும் சேர்த்து என் பென் டிரைவில் எடுத்து செல்வதுதான்.

அவ்வாறு நம் டிஜிட்டல் உலகை, நம்முடைய கோப்புகள் மட்டுமன்றி நமக்கு தேவையான செயலிகளையும் கொண்டு அமைக்க உதவுகிறது “போர்டபிள் ஆப்ஸ்” எனும் செயலிகளின் கூட்டு. இதில் பல்வேறு வகையான செயலிகள் கணினியில் நிறுவ வேண்டிய தேவை இல்லாமல் பென் டிரைவில் இருந்தே இயங்குகிறது. இதில் மற்றுமொரு சிறப்பம்சம் இது 100% இலவசமாகும்.

போர்டபிள் மெனு

போர்டபிள் மெனு

இந்த மென்பொருள் கூட்டமைப்பை கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தின் வாயிலாக பெறலாம்.
http://portableapps.com
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உபயோகப்படுத்திப் பாருங்கள். உஙளுக்கென்று ஒரு டிஜிட்டல் உலகம் அமைத்து அது உங்களைச் சுற்றி வரச் செய்யுங்கள்!

Advertisements

5 பதில்கள் to “நம்மைச் சுற்றி நம் உலகம்”

 1. Great Post from Gr8 Person.

  Very good site for Portable Application.. Thanks dear dude

 2. THAMBI said

  NANDRI NANBARE UNGAL THAGAVALUKKU

 3. ஜுர்கேன் க்ருகேர் said

  மிக மிக பயனுள்ள தகவல் கொடுத்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள்.

 4. பயனுள்ள செய்தியை பதிந்திருக்கிறீர்கள். அட்டகாசமாக உம்பணி தொடர வாழ்த்துக்கள்.

 5. puduvai siva said

  Thank you GR 8 person

  But, I am not having pen drive :-((

  puduvai siva

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: