கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

பென் டிரைவை “பத்திரமாக” அனுபவிக்க …

Posted by Clement மேல் செப்ரெம்பர் 9, 2008


பென் டிரைவ், மெமரி ஸ்டிக், பிளாஷ் டிரைவ், தம்ப் டிரைவ் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் சாதனம் இன்று நம்மிடையே வெகுவாக புழக்கத்தில் உள்ளது. நம்முடைய ஆவணங்கள், புகைப்படங்கள், நண்பரின் கணினியில் இருந்து காப்பி எடுத்த பாடல்கள், திரைப்படங்கள், அலுவலக கணினியில் டவுன்லோடு செய்த புரோக்கிராம்கள் – இப்படி பல்வேறு வகையான கோப்புகளை எடுத்துச் செல்லவும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளவும் இந்த பென் டிரைவ் (எனது நண்பர் சந்தரின் பாஷையில் “குச்சி”) உபயோகப்படுகிறது. இவ்வாறு நாம் இந்த குச்சியில் நமக்கு தேவையான கோப்புகளை மட்டும் பகிர்ந்து கொள்வதில்லை. கூடவே நமக்கு தேவையில்லாத அல்லது தவிற்க வேண்டிய வைரஸையும் பகிர்ந்து கொள்கிறோம்.

சரி, இவ்வாறு பென் டிரைவ் வாயிலாக வைரஸ் நமது கணினியை தாக்காமல் இருக்க என்னென்ன  வழிகளை பின் பற்றலாம்?

 • பென் டிரைவே உபயோகிக்காமல் இருக்கலாம்!
 • யூ.எஸ்.பி போர்ட்டை அரக்கு வைத்து அடைத்து விடலாம்!
 • நண்பர் தனது பென் டிரைவை நமது கணினியில் சொருக எத்தனிக்கும் பொழுது வெடுக்கென்று அதை பிடுங்கி ஜன்னல் வழியே வீசிவிட்டு “காணாம்போச்ச்ச்…” என்று கூவி அவரை மகிழ்விக்கலாம்!
 • அல்லது பின்வரும் வழிமுறையை கடைப் பிடிக்கலாம்.

பென் டிரைவை கணினியில் இணைத்தவுடனே அதில் ஒளிந்து கொண்டிருக்கும் வைரஸ் தானாக இயங்க “ஆட்டோரன்” எனும் வசதியையே(?) நம்பி இருக்கிறது. பெரும்பாலும் இது autorun.inf எனும் கோப்பு வடிவில் இருக்கும். இந்த கோப்பு மறைந்துள்ளதால் பொதுவாக நமக்கு தெரிவதில்லை. இந்த ஆட்டோரன் வசதியை தற்காலிகமாக முடக்க நாம் செய்ய வேண்டியது பென் டிரைவை சொருகும் பொழுது ஷிப்டு கீ – யை அழுத்திக் கொண்டிருப்பது தான். இவ்வாறு “பத்திரமாக” பென் டிரைவை சொருகியவுடன் நாம் முதலில் செய்ய வேண்டியது கணினியில் உள்ள வைரஸ் ஸ்கேனர் வாயிலாக பென் டிரைவை ஸ்கேன் செய்வது தான்.

 1. ஷிப்டு கீ – ஐ அழுத்திப் பிடித்துக் கொள்ளவும்.
 2. பென் டிரைவை சொருகவும்.
 3. பென் டிரைவ் டிடெக்டு ஆகும் வரை காத்திருக்கவும்.
 4. பென் டிரைவ் டிடெக்டு ஆனபின் ஷிப்டு கீ – ஐ விடவும்.
 5. வைரஸ் ஸ்கேனர் மூலம் பென் டிரைவை ஸ்கேன் செய்யவும்.

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. பென் டிரைவை இவ்வாறு “பத்திரமாக” சொருகிய பின்னும் ஆட்டோரன் இயங்க வாய்ப்பு இருக்கிறது. மை கம்ப்யூட்டர் ஐகானை டபுள் கிளிக் செய்து, அதில் தெரியும் ரிமூவபிள் டிரைவ் ஐகானை டபுள் கிளிக் செய்யும் பொழுது, ஆட்டோரன் மீண்டும் இயங்கும். அதனால் பென் டிரைவில் உள்ளவைகளைப் பார்க்க இந்த வழியை கடைப்பிடிக்காமல் எக்ஸ்புளோரரை இயக்கி (விண்டோஸ் கீ + E) அதில் இடதுபுறமாக தெரியும் போல்டர்ஸ் பேன் – இல் ரிமூவபிள் டிரைவை தெரிவு செய்யுங்கள். அப்படியே வலது கிளிக்க செய்து வைரஸ் ஸ்கேன் செய்யுங்கள். பென் டிரைவ் சுத்தமாக உள்ளது என்று தெரிந்தபின் வலது புறம் உள்ள பேன் – இல் உங்களுக்கு தேவையான கோப்பை தெரிவு செய்யுங்கள்.

கவனிக்க வேண்டிய விஷயம் இன்னும் ஒன்று உள்ளது. ஒரு சில வைரஸ்கள் போல்டர் ஐகானை கொண்டு இருக்கும். அவ்வாறான வைரஸை போல்டர் என்று நினைத்து டபுள் கிளிக் செய்தால் வைரஸ் இயங்கி கணினியை தாக்கும். அதனால் எக்ஸ்புளோரரின் வலப்புற பேன் – இல் எந்த போல்டரையும் டபுள் கிளிக் செய்யாமல், இடப்புற பேன் – இல் இருந்தே போல்டரை சிங்கிள் கிளிக் செய்து தெரிவு செய்யவும். வைரஸ் அல்லாத உண்மையான போல்டராக இருந்தால் மட்டுமே இடப்புற பேன் – இல் தெரியும். இடப்புற பேன் – இல் தெரியாமல் வலப்புற பேன் – இல் மட்டுமே தெரியும் போல்டர் (போல்டர் போல் தோன்றுவது) உண்மையான போல்டர் அல்ல. அதை அப்படியே அழித்து விடலாம்.

மேற்கூறியுள்ள வழிமுறைகளை கடைப்பிடித்து வந்தால் பென் டிரைவை “பத்திரமாக” அனுபவித்து மகிழலாம்!

Advertisements

14 பதில்கள் to “பென் டிரைவை “பத்திரமாக” அனுபவிக்க …”

 1. Thanks dear dude..

 2. உபயோகமான தகவல்கள்…. நன்றி…

 3. very useful information

 4. உபயோகமான பதிவு.
  எனது பென் ட்ரைவில் ஒரு வருடமாகச் சேமித்தவையெல்லாம் எங்கே போனதென்று தெரியவில்லை. கணனியை விட்டு அகற்றாமலே வைத்திருந்தேன். கடந்த வாரம் பென் ட்ரைவில் பார்க்க எதுவுமே இல்லை.
  பைல் ரெகவர் மூலம் சிலவற்றை மீட்க முடிந்தது .இழந்த எல்லாவற்றையும் எப்படி மீட்க முடியும் நண்பரே ?

 5. என்ககென்னவோ நீங்கள் சொல்லிய எல்லா வழிமுறைகளையும் விட…

  //நண்பர் தனது பென் டிரைவை நமது கணினியில் சொருக எத்தனிக்கும் பொழுது வெடுக்கென்று அதை பிடுங்கி ஜன்னல் வழியே வீசிவிட்டு “காணாம்போச்ச்ச்…” என்று கூவி அவரை மகிழ்விக்கலாம்! //

  என்ற வழி தான் செளகரியமாகப் படுகிறது. நமக்கும் சந்தோஷஷமாக இருக்கும்.

 6. Dolphin said

  Very useful Infn. Pls Keep the good work.

 7. சுபாஷ் said

  மிக்க நன்றி
  பயனுள்ள தகவல்

 8. அமிர்தராஜ் said

  எம். ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு:
  உங்கள் கோப்புகள் வைரஸால் மறைக்கப்பட்டிருந்தால் அவற்றை மீட்பது எளிது. டாஸ் பிராம்ப்ட் – இல் பென் டிரைவ் ரூட் டைரக்டரிக்கு மாறியபின் Attrib -S -H -R /s என்ற கட்டளை இட்டால் மறைந்த கோப்புகள் மீண்டும் தெரியும்.
  உங்கள் கோப்புகள் வைரஸால் அழிக்கப்பட்டிருந்தால் பி.சி. இன்ஸ்பெக்டர் பைல் ரெகவரி கொண்டு முயற்சித்துப் பார்க்கவும்.
  தொலைந்த கோப்புகளை மீட்கும் முயற்சி தொடரும் வரை அந்த பென் டிரைவில் வேறு கோப்புகளை எழுதாமல் இருப்பது நல்லது. அழிக்கப்பட்ட உங்கள் கோப்புகள் மீது வேறு கோப்புகள் ஓவர்ரைட் ஆகிவிட்டால் பின் தொலைந்த கோப்புகளை மீட்பது இயலாது.
  தொலைந்த உங்கள் கோப்புகள் மீண்டும் கிடைக்க நல்வாழ்த்துக்கள்!
  வருகை தந்தமைக்கும் மறுமொழியிட்டதற்கும் நன்றி!

  மறுமொழி இட்ட அனைவருக்கும், வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.

 9. அன்பின் நண்பருக்கு,

  அன்பான உதவிக்கு நன்றி.
  நீங்கள் சொன்னபடியே செய்தேன்.
  ஆனால் கணனி ‘Attrib’ is not recognized as an internal or external command, operable program or batch file எனச் சொல்கிறது. 😦
  ஏனப்படி நண்பரே ?

 10. அமிர்தராஜ் said

  நண்பரே,
  உங்கள் கணினியில் Attrib.exe எனும் ஒரு சிறிய புரோக்கிராம் windows\system32 டைரெக்டரியில் இருக்கும்.
  உங்கள் பென் டிரைவ் ரூட் டைரெக்டரியில் இருந்து அழைக்கும் பொழுது இது இயங்கவில்லை என்றால் உங்கள் PATH வேரியபிளில் கோளாறு இருக்கலாம்.
  ஒன்று உங்கள் path வேரியபிளை சரி செய்து விட்டு முயற்சியுங்கள்.
  அல்லது கீழ்கண்டவாறு முழு path உடன் attrib.exe – ஐ கால் பண்ணுங்கள்.
  C:\WINDOWS\system32\Attrib.exe -S -H -R /s

  மற்றுமொரு சிறு சூட்சமம்: தொலைந்து போன உங்கள் கோப்புகள் எம்.எஸ் வேர்ட் கோப்பாக இருப்பின், மறைந்துள்ள கோப்புகளில் ~WRL2741.tmp, ~WRL3321.tmp, ~WRL2132.tmp … போன்ற கோப்புகள் உள்ளதா என்று பாருங்கள். இருந்தால் அவற்றை recovered1.doc, recovered2.doc … என்று பெயர் மாற்றிக் கொண்டு எம்.எஸ். வேர்ட் கொண்டு திறந்து பாருங்கள் 😉
  மேலும் பல கவிதைகள் எழுத நல்வாழ்த்துக்கள் 🙂

 11. Lakshmanan said

  Nice information

 12. நண்பரே..

  என்னுடைய பென் டிரைவில் Trojan வகை வைரஸ் ஒன்று தொற்றிக் கொண்டு உயிரை எடுக்கிறது. நான் வைத்துள்ள ஒரு டைரக்டரியை அது மறைத்தே வைத்துள்ளது.

  எந்த சிஸ்டத்தில் இணைத்து திறந்தாலும் அது மறைந்து வருகிறது. அதனூடேயே autorun.inf என்கிற 176KB size உள்ள பைல் ஒன்றும் உள்ளது.

  வைரஸ் ஸ்கேனிங் செய்தால் வைரஸை டெலீட் செய்வதாகக் காட்டுகிறது. ஆனால் வேறு ஒரு சிஸ்டத்தில் பென்டிரைவை இணைத்தால் மறுபடியும் வைரஸ் இருப்பதாகக் காட்டுகிறது.

  பல முறை எனது பென் டிரைவை பார்மட் செய்தும் பார்த்துவிட்டேன். முடியவில்லை. 650 ரூபாய் கொடுத்து வாங்கியதால் தலையைச் சுத்தித் தூக்கிப் போடவும் மனமில்லை.

  நீங்கள் சொன்னது போல கமாண்ட் ப்ராம்ட்டிலும் செய்து பார்த்துவிட்டேன். அந்த டைரக்டரி காணவில்லை. ஆனால் வைரஸ் ஸ்கேனிங் செய்தால் அந்த மறைக்கப்பட்ட டைரக்டரியையும் சேர்த்துதான் ஸ்கேன் செய்கிறது. அப்போது தெரிவது நார்மலாகத் தெரிய மறுக்கிறது..

  என்னதான் செய்வது?

 13. அமிர்தராஜ் said

  உண்மைத் தமிழருக்கு,

  /*
  பல முறை எனது பென் டிரைவை பார்மட் செய்தும் பார்த்துவிட்டேன்.
  */
  பார்மேட் செய்ய துணிந்து விட்டால் பென் டிரைவில் வைரஸ் தங்க வாய்ப்பில்லை.
  சுத்தமான கணினியில் பொறுத்தி பார்மேட் செய்யுங்கள்.

  உங்கள் கணினியை வைரஸ் தாக்கியுள்ளது என நினைக்கத் தோன்றுகிறது.
  கணினியில் இருந்து பென் டிரைவை வைரஸ் தாக்குகிறது.
  நல்லதொரு ஆன்டி வைரஸ் கொண்டு சுத்திகரியுங்கள்.

  ஆன்டி வைரஸ் உதவி இல்லாமல் சுயமாக வைரஸை கையாள டாஸ் பிராம்ப்டில் சில யுக்திகள்:

  மறைந்துள்ளவைகள் தெரிய:
  DIR /a:h /s

  மறைந்துள்ள .exe தெரிய: (சாதாரணமாக .exe மறைக்கப்பட்டிருந்தால் அது வைரஸாக இருக்க வாய்ப்புண்டு)
  DIR *.exe /a:h /s (இங்கு /s என்பது சப்-டைரக்டரிகளிலும் தேட)

  மறைந்துள்ள ஒரு கோப்பை அழிக்க:
  உம்.: abc.exe எனும் கோப்பு c:\windows\system32 என்ற டைரக்டரியில் மறைந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதை அழிக்க
  DEL C:\windows\system32\abc.exe /a:r

  வைரஸை வெல்ல வாழ்த்துக்கள்!

  பி.கு. நான் உபயோகிக்கும் ஆன்டி வைரஸ் AVG. அதை http://free.avg.com இல் இருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.

 14. Dinesh said

  1 useful blog in 100s of trash!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: