கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

சில நேரங்களில் சில தளங்கள்…

Posted by Clement மேல் ஓகஸ்ட் 19, 2008


பிராட்பேண்டு எனப்படும் அதிவேக இணைய இணைப்பு கொண்டிருக்கும் நான் சில நேரங்களில் சில தளங்களுக்கு மட்டும் இணைப்பு கிடைக்காமல் தவித்து இருக்கிறேன். சில நாட்களுக்கு முந்தியும் அப்படித்தான். யாஹூ மின்னஞ்சல் தளத்திற்கு இணைப்பு சரிவரக் கிடைக்கவில்லை. என் கணினியில் ஏதாவது கோளாறு இருக்குமோ என்று நினைத்து சோதித்துப் பார்ததில் பலன் ஒன்றுமில்லை. மோடத்தை (ஹுவாவெய்) அணைத்து விட்டு பின் திரும்பவும் ஆன் செய்யும் பொழுது வேலை செய்வது போல் தோன்றியது. பின் திரும்பவும் அதே கதை. ஒரு மெயிலை திறப்பதற்காக நான் சுட்டிய சொடுக்கை காண்பிக்க பிரவுசர் நீண்ட நேரம் முயற்சி செய்துவிட்டு பின் தளம் கிடைக்கவில்லை என்று தோல்வியை ஒப்புக் கொண்டது.

எனக்கு மட்டும் தான் இப்படி என்று நினைத்தால் எனக்கு தெரிந்தவர்களுக்கும் இதே கதிதான். நண்பர் சந்தர் , தான் இரண்டு நாட்களாக மெயிலே பார்க்க முடியவில்லை என்று கூறினார். சீதாலட்சுமி அம்மையார் சமீபத்தில் வெளிநாடு சென்றிருக்கும் தன் மகனுடன் ஈ-மெயிலில் இரண்டு நாட்களாக தொடர்பு கொள்ள தவியாய் தவித்து, பி.எஸ்.என்.எல் கோளாரைத் தவிர மற்ற எல்லா காரணங்களையும் நினைத்து நினைத்து அங்கலாய்த்து, இரண்டாம் நாளில் விடா முயற்சியுடன் சற்றேரக்குறைய நடுநிசியில் மெயிலை பார்த்த பின்னரே ஓய்ந்திருக்கிறார்.

சரி. பிரச்சினை என்னவென்று புரிந்து விட்டது உங்களுக்கு. இது ஏன் என்று இப்பொழுது பார்ப்போம். இந்த பிரச்சினைக்கு காரணம் நான் நினைப்பது என்னவென்றால் பிராட்பேண்ட் (பி.எஸ்.என்.எல்)-இன் டி.என்.எஸ் (DNS) தான். இந்த டி.என்.எஸ் என்றால் என்னவென்று பார்போம். இணையத்தில் உள்ள எல்லா கணினிகளையும் (யாஹூ சர்வர் உட்பட) தனித்து அறிய உதவுவது அதன் ஐ.பி. (IP)  எண் தான். இது 123.123.123.123 என்பது போல் இருக்கும். ஒவ்வொரு இணையதளத்திற்கும் இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள இயலாது. இலகுவாக நாம் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியது yahoo.com போன்ற எழுத்துக்களின் சரமே ஆகும். இவ்வாரான எழுத்துச் சரங்களிற்கும் ஐ.பி. எண்ணிற்கும் தொடர்பை பட்டியலிட்டு வைத்திருப்பதுவே டி.என்.எஸ் அதாவது Domain Name System  ஆகும். நான் எனது பிரவுசரில் yahoo.com  என்று தட்டி சொடுக்கும் பொழுது, எனது இணைய இணைப்பு முதலில் டி.என்.எஸ் சர்வரை தொடர்பு கொண்டு yahoo.com என்னும் எழுத்துச் சரத்திற்கு உரிய ஐ.பி. என்னவென்று வினவுகிறது. அந்த ஐ.பி. எண் கிட்டிய பின்னரே தளத்திற்கு தொடர்பு கிடைக்கிறது. இந்த டி.என்.எஸ் சர்வர் வேலை பளுவினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ சரிவர இயங்க முடியவில்லை என்றால் எனக்கு வேண்டிய தளத்துடன் இணைப்பு கிடைப்பதில்லை.

இந்தப் பிரச்சினை ஏன் என்று பார்த்து விட்டோம். இதற்கு எப்படி தீர்வு காண்பது? சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிப் பார்க்கலாம். சண்டையிட்டுப் பார்க்கலாம். கெஞ்சிக்கூடப் பார்க்கலாம். அல்லது ஓப்பன் டி.என்.எஸ் – ஸிற்கு மாறலாம்!

ஓப்பன் டி.என்.எஸ் என்றால் என்ன? எப்படி அதற்கு மாறுவது? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது அல்லவா? ஓப்பன் டி.என்.எஸ் தளத்திலேயே இதற்கு அருமையாக விளக்கம் தருகிறார்கள்.

கீழ்கண்ட சொடுக்கை கிளிக்  செய்யுங்கள். கீழே உள்ள படத்தைப் போல் தெரியும்.

https://www.opendns.com/start

நீங்கள் உபயோகப்படுத்துவது கணினியென்றால் computer எனும் தெரிவை கிளிக்குங்கள், ரூட்டர் அல்லது டி.என்.எஸ் சர்வர் என்றால் அதற்கேற்றவாறு கிளிக்குங்கள். நான் computer ஐ கிளிக்கியுள்ளேன்.

இப்பொழுது தெரியும் தெரிவுகளில் நீங்கள் உபயோகப்படுத்தும் கணினியின் வகை அல்லது ஆப்பரேடிங் சிஸ்டத்தை பொறுத்து உங்கள் தெரிவை கிளிக்குங்கள். சீத்தாலட்சுமி அம்மையார் XP உபயோகிக்கிறார். ஆகவே அவர் அந்த தெரிவை கிளிக் செய்யவும்.

நேரிடையாக XP தெரிவிற்கு செல்ல இங்கே கிளிக்கவும். https://www.opendns.com/start?device=windows-xp

இப்பொழுது உங்கள் கணினியில் நீங்கள் செய்யவேண்டிய மாற்றங்களை மிகவும் தெளிவாகவும் சரியாகவும் விளக்கியுள்ளார்கள். அதை அப்படியே பின்பற்றவும். இந்த தளத்தில் குறிப்பிட்டுள்ள வழிகளை சரியாக பின்பற்றினால் இரண்டே நிமிடங்களில் உங்கள் கணினியை ஓப்பன் டி.என்.எஸ்-ஸிற்கு மாற்றலாம்!

Advertisements

21 பதில்கள் to “சில நேரங்களில் சில தளங்கள்…”

 1. Varadharajan said

  தங்களுடைய பதிவு தற்சமயம் மிகவும் தேவையான ஒன்று. அனைத்து BSNL வடிகையளர்களும் இம்முறையை பின்பற்றலாம்.

 2. Tamil said

  தங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன. மேலும் பலரை தங்கள் பதிவுகள் சென்றடைய, http://www.tamilish.com தளத்தில் பகிரவும்

 3. அமிர்தராஜ் said

  தங்கள் பாராட்டிற்கும் ஆதரவிற்கும் நன்றி. உங்கள் யோசனைப்படியே மேற்கூறப்பட்ட தளத்தில் இந்த பதிவை பகிர்ந்துவிட்டேன்!

 4. தகவலுக்கு நன்றி. உங்கள் யோசனை படி செட்-அப் செய்து கொண்டிருக்கிறேன்.

 5. அமிர்தராஜ் said

  பாபு அவர்களுக்கு: இப்பதிவு உங்களுக்கு உபயோகப்படுவதில் மகிழ்ச்சி. தங்களின் வலைப்பூவை பார்த்தேன். நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  வரதராஜன் அவர்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

 6. Jainul Abideen said

  Really Fantastic Articles ….

 7. Hari Rajagopalan said

  தகவலுக்கு நன்றி.

 8. asramnath said

  இதே பிரச்சனை என்க்கும் இருந்தது, OPEN DNS set செய்தும் சரிவர இயங்கவில்லை. அப்பொழுதும், no connection. BSNL ல் தான் என நினைக்கிறேன்.

 9. அமிர்தராஜ் said

  மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

 10. அமிர்தராஜ் said

  ஜெய்னுல் அபிதீன் & ஹரி ராஜகோபாலன்: தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

  அஸ்ரமத்: உங்கள் இணைப்பில். டி.என்.எஸ் பிரச்சினையால் தான் இணைப்பு கிடைக்காமல் இருந்தது என்றால், ஓப்பன் டி.என்.எஸ்ஸிற்கு மாறியவுடன் சரியாகிவிடும். வேறு காரணங்களினால் இணைப்பு கிடைக்கவில்லையென்றால் ஓப்பன் டி.என்.எஸ் உங்கள் பிரச்சினையை தீர்க்காது. (டி.என்.எஸ் பிரச்சினைக்கு ஒரு அறிகுறி, ஒரு சில தளங்கள் பிரச்சினை இன்றி கிட்டும். ஆனால் ஒரு சில தளங்களோ சரிவரக் கிடைக்காது))
  பி.கு: டி.என்.எஸ் செட்டிங்குகளை மாற்றியவுடன் உங்கள் பிரவுசரை முழுமையாக (ஒரு பிரவுசர் விண்டோ விடாமல்) மூடி பின் திரும்பவும் இயக்கினீர்கள?

 11. தொடர்புடைய இடுகை

  http://www.payanangal.in/2008/07/blog-post_8855.html

 12. அமிர்தராஜ் said

  தொடர்புடைய இடுகை மறுமொழிக்காக நன்றி.
  உங்கள் பதிவை கண்டேன். ஆம். ஓப்பன் டி.என்.எஸ், என் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினை தவிர வேறு பிரச்சினைகளையும் த்விர்க்கிறது.
  ஓப்பன் டி.என்.எஸ்ஸின் சிறப்பம்சங்கள் பற்றி மேலும் அறிய இங்கே சுட்டவும்
  http://www.opendns.com/features/overview/

  உங்கள் வருகைக்காகவும் மறுமொழிக்காகவும் மிக்க நன்றி. உங்கள் தளம் மூலம் உங்களைப் பற்றி அறிந்தேன். உங்கள் பணி சிறப்பாக தொடர என் வாழ்த்துக்கள்!

 13. veerasundark said

  பயனுள்ள தகவல்.

 14. A.HARI said

  Thank you very much for very informative post. I have also faced this ‘mysterious’ problem when my internet started behaving like a drunkard. Your simple language helps computer ‘illiterates’ like me to understand ‘something’.

  I will be more happy if you post more frequently.

  Millions are being forced to use PCs without understanding any basics. They get struck when they face some problems. There is absolutely no support available.

  I think you can play an useful role in this direction.

  Kindly tell me if i can ask some computer related queries. (May not be related to this post)

  Hari

 15. அமிர்தராஜ் said

  ஹரி அவர்களுக்கு,
  தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
  /* I will be more happy if you post more frequently. */
  தள மேலாண்மையில் சற்று கவனம் செலுத்தி வந்ததால் இடுகைகள் அவ்வளவாக இல்லை. இருப்பினும் மறுமொழியில் பதில்கள் (தீர்வுகளும்தான்!) எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
  /* Kindly tell me if i can ask some computer related queries. */
  தாராளமாக கேட்கலாம். உங்கள் கேள்விகளை மறுமொழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ (mailbcr-kaniththuli AT yahoo DOT com) எனக்கு தெரியப் படுத்துங்கள். எனக்கு தீர்வு அறிந்தால், மறுமொழியாகவோ அல்லது இடுகையாகவோ எழுதுகிறேன்.

  தங்கள் வலைப்பூவில் (http://changeminds.wordpress.com) அண்மைய இடுகைகளை வாசித்தேன். உற்சாகம் அளிப்பதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது.

  தங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி.
  அமிர்தராஜ்

 16. A.HARI said

  Thanks for your kind words about my blog ‘Inspire Minds’ http://changeminds.wordpress.com/.

  Thanks for your kind permission to ask queries.

  I have few doubts about word press blogs. Can U kindly guide me?

  1.I wanted to have a look at list of postings available in your blog, so that I can see the headings and select the post I wish to read.

  Is it possible to have an index of contents of wordpress blog?

  2.Is it possible to have a print button at the end of posts so that we can take a printout if required?

  3.I wanted to read all comments posted in this blog at one go without going thro each posting. Is it possible?

  4.can I send any post by e mail to my friends? How to do it?

  5.Is it possible to export all posting to MS word to take a print out?

  Hari

 17. அமிர்தராஜ் said

  ஹரி அவர்களுக்கு,
  // item 1
  http://feeds.feedburner.com/kaniththuli என்ற முகவரிக்கு செல்லவும்

  // item 2
  நல்ல யோசனை. ஆதரவாளர்களுக்கு உபயோகமாக இருப்பின் முயற்சி செய்கிறேன்.
  // item 3
  http://feeds.feedburner.com/wordpress/tZSe என்ற முகவரிக்கு செல்லவும்
  // item 4
  தாராளமாக அனுப்பலாம். நீங்கள் விரும்பும் இடுகை (post) தலைப்பில் வலது கிளிக் செய்து ஷார்ட்கட்டை காப்பி செய்யுங்கள். நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுக்குள் பேஸ்டு செய்து அனுப்புங்கள்.

  // item 5
  எல்லா இடுகைகளையும் ஒரே சமயத்தில் காப்பி செய்ய இயலாது. தளத்தில் தெரியும் இடுகைகளை காப்பி செய்து பின் வேர்டில் பேஸ்டு செய்து கொள்ளலாம்.

  உங்கள் கேள்விகளுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்.

 18. changeminds said

  Thanks for your kind reply.

  One more doubt. I wanted to know whether is it possible to have an index of contents as a part of blog.
  Visitors can see the topics alone and then visit the topic of their interst.

 19. அமிர்தராஜ் said

  சேன்ஜ்மைன்ட்ஸ் (ஹரி) அவர்களுக்கு,
  வலைப்பூ (பிளாக்) என்பது வளர்ந்து கொண்டே செல்லும் தன்மையை உடையது. ஒரு நன்கு வளர்ந்த வலைப்பூவில், அனைத்து இடுகைகளின் தலைப்பையும் ஒரே இன்டெக்ஸ் பக்கத்தின் கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமாக இருக்கலாம். வேர்ட்பிரஸ்ஸில் தற்சமயம் அந்த வசதி இல்லை. நீங்களாக ஒரு பக்கத்தை (page) உருவாக்கி அதில் இன்டெக்ஸ் போல் நீங்களாக உருவாக்கலாம். வேலைப்பளு சற்று இருக்கத்தான் செய்யும். முயற்சித்துப் பாருங்கள்.

 20. A.Hari said

  Thanks for immediate reply.

  I realised this after posting the query. Now I have created a new page “Contents of blog’. This was one of the long pending requests from my readers as there are more than 40 posts avbl now.

 21. A.Hari said

  Again one request which you can consider when you are free.

  Can you post a brief on SEO as applicable to blogs like yours and mine.

  How to attract more traffic?

  Hari

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: