கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

வுபி – வின்டோஸில் ஒரு லீனக்ஸ் இன்ஸ்டாலர்!

Posted by Clement மேல் ஓகஸ்ட் 13, 2008


உபண்டு லீனக்ஸ்

உபண்டு என்பது இலவசமாக கிடைக்கக் கூடிய லீனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்களில் ஒன்று. உபண்டு இலவசமாக கிடைப்பது மட்டுமன்றி அவ்வப்பொழுது மேம்படுத்தப் படுவதால், தரமான ஒரு லீனக்ஸ் வெளியீடாகவும் விளங்குகிறது. அதனாலேயே கணினி ஆர்வலர் பலராலும் லேப்டாப்பிலும், டெஸ்க்டாப்பிலும் உபயோகப்ப்டுத்தப்பட்டு வருகிறது.

விண்டோஸ் + லீனக்ஸ்

விண்டோஸ் உபயோகித்து பழக்கப்பட்டவர்கள் தங்களது கணினியில் லீனக்ஸ் நிறுவும் பொழுது  விண்டோஸை நீக்காமல் அப்படியே லீனக்ஸையும் சேர்த்து நிறுவுதலையே விரும்புகிறார்கள். சாதாரணமாக லீனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை விண்டோஸ் உள்ள கணினியில் நிறுவ வேண்டுமென்றால் அதற்கென தனி பார்டிஷனில் நிறுவி, டூயல் பூட் செய்யுமாறு அமைக்க வேண்டும். உபயோகப்படுத்திப் பார்த்து விட்டு பின் லீனக்ஸ் வேண்டாம் என்றால் அதை நீக்குவதற்கும் பார்டிஷனில் “கை வைக்க” வேண்டும். சமயத்தில் விண்டோஸையும் திரும்ப நிறுவ வேண்டியிருக்கும். “லீனக்ஸ் எப்படித்தான் இருக்கிறதென்று பார்ப்போமே..” என்று சோதித்து பார்க்க வேண்டுமென நினைக்கும் பொது ஜனத்திற்கு, இதெல்லாம் வேண்டாத வீர விளையாட்டாக  தோன்றும்.

லைவ் சி.டி.

லீனக்ஸில் “லைவ் சி.டி” என்பது, லீனக்ஸை நிறுவாமலேயே பூட்டபிள் சி.டி. டிரைவிலிருந்து அப்படியே இயக்க வல்ல ஒரு வெளியீடாகும். நாப்பிக்ஸ் லைவ் சி.டி. ஒரு பிரபல லைவ் சி.டி. வெளியீடாகும். உபண்டுவிலும் லைவ் சி.டி. வெளியீடு உள்ளது. ஆனால் லைவ் சி.டி உபயோகப்படுத்திய பலரும் அதனை “எப்பொழுதாவது ஒரு சில சமயம்” உபயோகப்படுத்த சரியே தவிர “தினந்தோறும்” உபயோகப் படுத்த, ஹார்ட் டிஸ்க்கில் நிறுவப்பட்டது போல் சகஜமாக உபயோகிக்க முடிவதில்லை என்று உணருகின்றனர். நம்முடைய தனிப்பட்ட செட்டிங்குகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு முறை பூட் செய்யும் பொழுதும் பெர்சிஸ்டன்ட் செட்டிங்-ஐ லோடு செய்ய வேண்டியிருத்தல், சி.டி. டிரைவ் ஆக்கிரமிக்கப்படுதல், சி.டி. கீறல் விழுந்து சரியாக இயங்காமல் நாம் வேலை செய்யும் பொழுது பாதியில் நின்றுபோதல் ஆகிய பிரச்சினைகளே இதற்கு காரணம்.

விண்டோஸ் உபண்டு இன்ஸ்டாலர்! – வுபி

சாதாரண பொது ஜனமும் நினைத்த பொழுது லீனக்ஸை நிறுவவும் நீக்கவும் என்ன செய்வது? உபண்டுவின் வுபி இதற்கு ஒரு சரியான தீர்வாகும். விண்டோஸில் இருந்து கொண்டே உபண்டு லீனக்ஸை நிறுவவும், தேவையில்லை என்றால் பின் நீக்கவும் ஒரு விண்டோஸ் இன்ஸ்டாலரை தயாரித்து உள்ளனர் உபண்டு தயாரிப்பாளர்கள்.

இந்த இன்ஸ்டாலர், பயனாளரிடம் மிகக் குறைந்த எண்ணிக்கை கேள்விகளையே கேட்டு பின் தானே உபண்டுவை நிறுவி விடுகிறது.

இதில் உபண்டு ஒரு தனி டைரக்டரியிலேயே நிறுவப்படுகிறதால் ஹார்ட் டிஸ்க் பார்டிஷனில் மாற்றம் செய்யத் தேவை இல்லை. வேண்டாம் என்று இதை நீக்குவதும் சுலபம். விண்டோஸில் இருந்தே இதை இலகுவாக நீக்கலாம்!

இனி எல்லோரும் லீனக்ஸை “ஒரு கை” பார்க்கலாம்!

பி.கு. இது கிடைக்குமிடம் இங்கே – http://wubi-installer.org/

Advertisements

7 பதில்கள் to “வுபி – வின்டோஸில் ஒரு லீனக்ஸ் இன்ஸ்டாலர்!”

 1. Varadharajan said

  தாங்கள் இந்த முறையை Nvidia 8800gt பொருத்தப்பட்ட கணினியில் முயற்சித்து பார்த்ததுண்டா ?

 2. அமிர்தராஜ் said

  இல்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ள கார்டுடன் உபண்டுவில் பிரச்சினை உண்டென்று அறிகிறேன்.
  உபண்டு ஃபாரத்தில் இதைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.
  கீழே கொடுக்கப்பட்டுள்ள சொடுக்குகளை பின்பற்றிப் பார்க்கவும். தீர்வு கிடைக்கலாம்.
  http://ubuntuforums.org/showthread.php?p=4119312 (#8 ஆவது பதிலைப் பார்க்கவும்)

  http://ubuntuforums.org/showthread.php?t=665018 (#6 ஆவது பதிலைப் பார்க்கவும்)

  நல்வாழ்த்துக்கள்!

 3. Correct me if I am wrong. My understanding is that Wubi is just an installer. Should we connect to internet for downloading the ubuntu OS files ? or, if we have a ubuntu dvd, can I use wubi to intall that version of ubuntu which is on a DVD ?

 4. அமிர்தராஜ் said

  சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளீர்கள்! வுபி ஒரு இன்ஸ்டாலர் மட்டுமே. என் இடுகையின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியிலிருந்து (வுபி-இன்ஸ்டாலர்.ஆர்க்) பதிவிறக்கம் செய்யும் செய்யும் கோப்பு (Wubi-8.04.1-rev506.exe) 958 கே.பி அளவிலானது ஆகும். இதை இயக்கும் பொழுது முதல் படத்தில் (https://kaniththuli.files.wordpress.com/2008/08/install-11.jpg) உள்ளது போல் தோன்றும். இதில் ஒரு குறை என்னவென்றால் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவா? அல்லது சி.டி. / டி.வி.டி. யிலிருந்து நிறுவவா? என்று ஆப்ஷன் கேட்பதில்லை.
  இந்த குறைபாட்டை தாண்டிச் செல்ல வழியுண்டு. அதாவது, வுபி இன்ஸ்டாலர் கோப்பு (Wubi-8.04.1-rev506.exe) இருக்கும் அதே பாதையில் உபண்டு லீனக்ஸிற்கான சி.டி.(CD) ஐ.எஸ்.ஓ (ISO) இமேஜ் இருக்குமானால், வுபி இணையத்தில் இருந்து நிறுவாமல் அந்த ஐ.எஸ்.ஓ இமேஜிலிருந்து நிறுவும்.
  இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது இரண்டு.
  1. முதலாவது என்னவென்றால் தற்போதைய இன்ஸ்டாலர் சி.டி.(CD) ஐ.எஸ்.ஓ(ISO) இமேஜையே ஏற்குமே தவிர டி.வி.டி(DVD) ஐ.எஸ்.ஓ(ISO) இமேஜை ஏற்காது.
  உங்களிடம் உள்ள டி.வி.டி யிற்கு பதிலாக சி.டி. யின் ஐ.எஸ்.ஓ இமேஜை வுபி உள்ள அதே டைரக்டரியில் சேமித்து வைத்து முயற்சி செய்யுங்கள்.
  2. இரண்டாவது என்னவென்றால் இன்ஸ்டாலர் வெர்ஷன் எண் ஐ.எஸ்.ஓ இமேஜுடன் ஒத்து போக வேண்டும். அதாவது Wubi-8.04.1-rev506.exe என்னும் இன்ஸ்டாலருக்கு உபண்டு லீனக்ஸ் 8.04.1 டெஸ்க்டாப் வெர்ஷனிற்கான ஐ.எஸ்.ஓ தேவைப்படுகிறது.

  உங்களிடம் சரியான ஐ.எஸ்.ஓ இமேஜ் இல்லையெறால் மட்டுமே இணையத்திற்கு இணைப்பு வேண்டும். அதுவும் நீங்கள் நிறுவப்போகும் கணினியில் தான் இணைப்பு வேண்டும் என்றில்லை. வேறு கணினியில் பதிவிறக்கம் செய்து கூட உங்கள் கணினியில் சேமித்து பின் நிறுவலாம்.

  வெற்றியடைய நல்வாழ்த்துக்கள்!

  பி.கு. இதைப் பற்றி மேலும் ஐயங்கள் இருப்பின் இங்கே சொடுக்குக.
  https://wiki.ubuntu.com/WubiGuide

 5. சுபாஷ் said

  நல்ல பதிவு.
  எனக்கிது மிக நன்றாக வேலைசெய்தது.
  சுபாஷ்

 6. அமிர்தராஜ் said

  முயன்று பார்த்ததற்கும் மறுமொழிக்கும் நன்றி.
  சுபாஷிற்கு ஒரு சபாஷ்!

 7. chandarsekar said

  கணித் துளியில் பெரு வெள்ளமாய் பதிந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: