ஹைபர்நேட் செய்ய ஒரு ஷார்ட்கட்
Posted by Clement மேல் ஓகஸ்ட் 11, 2008
நண்பர் பாலாவின் கணினியில் ஹைபர்நேட் டேப் காணானதால் வேறு வழியில் ஹைபர்நேட் செய்வதற்கான வகை தேடினேன். என் கணினியில் ஹைபர்நேட் ஆப்ஷன் கிடைப்பதால், இந்த ஆப்ஷன் ஏன் நண்பரின் கணினியில் மட்டும் வருவதில்லை என்று ஆராய்ச்சி செய்ய இயலவில்லை. தற்போதைக்கு ஏதாவது குறுக்கு வழி இருந்தால் அதை பின்பற்றுவது, ஆராய்ச்சியெல்லாம் பின்னர் பார்த்துக் கொள்வது என்று நினைத்து, குறுக்கு வழி ஒன்றினை கீழே கொடுக்கிறேன்.
டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து நியூ >> ஷார்ட்கட் என தெரிவு செய்யவும்.
ஷார்ட்கட் லொகேஷனில் பின்வருமாறு தட்டச்சவும்.
%WINDIR%\system32\rundll32.exe PowrProf.dll, SetSuspendState
நெக்ஸ்ட் பொத்தானை கிளிக்கவும்
பெயரளிக்கும் பெட்டியில் ஹைபர்நேட் என்று தட்டச்சித்து பினிஷ் பொத்தானை கிளிக்கவும்.
இப்பொழுது இந்த ஷார்ட்கட்டை கிளிக்கினால் கணினி ஹைபர்நேட் ஆகவேண்டும்!
“ஹைபர்நேட் ஆனால் பரவாயில்லை…, வேறு ஏதாவது ஆனால்…???” என திருவிளையாடல் தருமி போல் பாலா நினைப்பது தெரிகிறது.
இந்த முறையை ஹைபர்நேட் எனேபிள் ஆகியிருக்கும் என் கணினியில் கடைப்பிடிக்கும் பொழுது நன்றாக வேலை செய்கிறது. உங்கள் கணினியில் அப்படியே “வேறு ஏதாவது” ஆனால் கவலைப் படாதீர்கள். கணினியை மீண்டுமாக ஸ்டார்ட் செய்யுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
A.HARI said
I like your style of explaining complicated computer problems in simple tamil. This helps many computer users like me.
Keep it up.
Hari
சுபாஷ் said
அருமையான விளக்கங்கள்