கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

XP – ஹைபர்நேட் செய்வது எப்படி?

Posted by Clement மேல் ஓகஸ்ட் 4, 2008


விண்டோஸ் கணினியை ஹைபர்நேட் செய்யும் வசதி எளிதில் கண்களுக்கு புலப்படுமாறு அமையப் பெற்றிருக்கவில்லை. இருந்தாலும் ஒன்றினுக்கு மேற்பட்ட வழிகளில் கணினியை ஹைபர்நேட் செய்யலாம். இலகுவான வழி ஒன்றினை இங்கு காண்போம்.

“ஹைபர்நேட்” செய்யும் வழி :

சாதாரணமாக நாம் ஸ்டார்ட் மெனுவில் உள்ள “டர்ன் ஆஃ கம்பியூட்டர்” எனும் தெரிவை கிளிக்கினால் கீழெ இருப்பது போல் ஒரு டையலாக் பெட்டி தெரியும்.

இப்பொழுது ஷிப்டு கீ – யை அழுத்தவும். உடனே “ஸ்டான்டு பை” எனும் தெரிவிற்கு பதிலாக “ஹைபர்நேட்” எனும் தெரிவு தெரியும்.

இப்பொழுது “ஹைபர்நேட்” எனும் தெரிவை கிளிக்கினால் போதும், கணினி ஹைபர்நேட் ஆகும்!

Advertisements

9 பதில்கள் to “XP – ஹைபர்நேட் செய்வது எப்படி?”

 1. தங்களுடைய வலைப்பூ மிகவும் நன்றாக இருக்கிறது. மேலும் வளர வாழ்த்துக்கள்.

 2. ந‌ல்ல‌ முய‌ற்சி , தொட‌ர்ந்து எழுத‌வும்.

 3. அமிர்தராஜ் said

  சந்தர் அவர்களின் வாழ்த்துக்களுக்கும், விஜய்ராஜேஷ் அவர்களின் ஊக்குவித்தலுக்கும் மிகவும் நன்றி.
  நண்பர் ஒருவர், “என் லேப்டாப் மட்டும் ஹைபர்நேட் ஆகிறது. ஆனால் என் டெஸ்க்டாப் பிசி மட்டும் ஹைபர்நேட் ஆவதில்லையே, ஏன்? இரண்டுமே விண்டோஸ் எக்ஸ் பி தானே … ” என்று கேட்க அவருக்காகவே வலைப்பதிவு செய்தேன். மற்றவர்களும் இதைக் கண்டிருக்கிறார்கள் என்று தெரியவரும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது.
  இது உபயோகமாக இருப்பின், முயற்சியை மேலும் தொடரலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆதரவிற்கு நன்றி.

 4. இந்த முறை வேலை செய்யவி்லலை என்றால் Start/Control Panel செல்லவும். பிறகு Performance and Maintenance ->Power Options என்ற பிரிவுக்குச் செல்லவும். ிகடைக்கும் விண்டோவில் Hybernate என்பதனை தேர்ந்தெடுத்து ிகடைக்கும் பெட்டியில் enable hibernation என்ற பிரிவுக்கு டிக் செய்யவும். பிறகு ஓகே செய்து வெளியேறவும்.

 5. Hibernate செய்வதால் கணினி வேகம் குறையுமென்று எங்கோ படித்த நியாபகம்!

 6. அமிர்தராஜ் said

  இது போல் நடக்க சாத்தியமுண்டு என்றாலும் ஹைபர்நேட் செய்த உடனே பிரச்சினை எழும் என்று எதிர்பார்க்க வாய்ப்பில்லை. எப்படி என்று பார்ப்போம்.

  தொடர்ந்து பத்து நாட்களுக்கு தினமும் நான்கு மணி நேரம் வேலை செய்து விட்டு பின் ஹைபர்நேட் செய்து வந்தால், விண்டோசை பொறுத்தமட்டில் தொடர்ந்து நாற்பது மணி நேரம் வேலை செய்வதற்கு சமம். இந்த சமயத்தில் பல புரோகிராம்களை இயக்கியும் நிறுத்தியும் இருப்போம். பல கோப்புகளை திறந்தும் மூடியும் இருப்போம். ஒரு சில தகராறு செய்யும் புரோகிராம்களை டாஸ்க் மேனேஜர் கொண்டு வலுக் கட்டாயமாக டெர்மினேட் செய்தும் இருப்போம். இந்நிலையில் கணினியின் மெமரியில் கார்பேஜ் கலெக்ட் ஆவது சாத்தியம்.

  நீங்கள் கூறுவது போல் கணினி வேகம் குறைவது இவ்வாறாக ஃபிரீ மெமரி குறையும் பொழுது அல்லது மெமரி கரப்ட் ஆகும் பொழுது நடக்கலாம்.

  கணினியை ஹைபர்நேட் செய்யும் பொழுது, விண்டோஸ், மெமரியில் ஊள்ளவைகளை (கார்பேஜ் உட்பட) அப்படியே ஒரு கோப்பில் சேமித்து வைத்து விடும். பின் திரும்பவும் பூட் செய்யும் பொழுது, இந்த கோப்பில் உள்ளதை அப்படியே மெமரியில் ஏற்றி விடும். ஷட்டவுன் செய்தபின் பூட் செய்யும் பொழுதோ மெமரி “பிரெஷ்” ஆக இருக்கும்.

  உங்கள் உபயோகத்தை பொறுத்து ஒரு சில நாட்களுக்கு ஒரு முறையோ, அல்லது அவசியம் ஏற்படும் பொழுதோ எல்லா புரோகிராம்களையும் மூடி விட்டு கணினியை முழுமையாக ஷட்டவுன் செய்து வந்தால் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஹைபர்நேட் வசதியை பயன்படுத்தி மகிழலாம்!

  நல்லதொரு வினாவை எழுப்பிய ரம்யா ரமணி அவர்களுக்கு நன்றி!

 7. Lakshman said

  I really enjoyed your blog. Very useful information. I feel like reading “Tamil Computer” magzine which was my favorite during high school in 1998. I have one small request to keep at this moment, I am teaching how to use computer to my parents (aged 60+) like browsing internet, reading newspaper and skype etc. I find very difficult to educate them. Can you write some basics in how to use computer/laptop, about internet, and fundaes in tamil, so that they can read in tamil and understand. This is purely not a selfish thought, I guess now a days elders desperately needs to use computer to communicate with their sons/daughter who were in abroad. There is no book/magazine which teaches few basics to help them easy. Thats why am keeping this humble request. This thought was running in my mind for few years, perhaps persons like you can do this. Can you share your views on this?

  Really nice to read your blog and all the very best

  Cheers

  Lakshmanan

 8. அமிர்தராஜ் said

  லட்சுமணன் அவர்களுக்கு:
  இந்த வலைப்பதிவை இரசித்து வாசித்ததற்காக நன்றி. தமிழ் கம்ப்யூட்டர் இதழ்களை நானும் வாசித்திருக்கிறேன். ஒரு சில படைப்புகளை எழுதியும் இருக்கிறேன். தங்கள் பாராட்டுதலுக்காக நன்றி.
  கணினி அறியாத மூத்தவர்களுக்காக எழுதக் கோரும் உங்கள் வேண்டுதல் மிகவும் சரியானதே.
  எனது சக ஊழியரில் சிலர் தங்கள் மகன்கள் வெளிநாடு சென்ற பின், அவர்களுடன் மின்னஞ்சல் மற்றும் வாய்ஸ் சேட் வாயிலாக சம்பாஷிக்க எனது உதவியை நாடும் பொழுது நானும் இந்தத் தேவையை உணர்ந்திருக்கிறேன். கூடிய விரைவில் அவ்வாறான பதிவுகளை எழுதுகிறேன்.
  ஆக்கபூர்வமான உங்கள் மறுமொழிக்காகவும் வாழ்த்துகளுக்காகவும் மிகவும் நன்றி.
  வாழ்த்துக்கள்!
  அமிர்தராஜ்

 9. Lakshmanan said

  Thanks! Expecting some good posts from you soon.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: