கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

அத்தியாவசியமானவை

ஆன்டி-வைரஸ்

கணினி இயங்குதளம் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மற்றும் அதற்கான செக்யூரிட்டி அப்டேட்டுகளுக்கு அடுத்து அத்தியாவசியமாக தேவைப்படுவது ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர் தான். இக்கூற்று லீனக்ஸ் இயங்குதளங்களுக்கும் பொருந்தும்.

அத்தகைய ஆன்டி-வைரஸ் மென்பொருட்கள் இணையத்தில் இலவசமாகவும், தரமுள்ளதாகவும் என்ன கிடைக்கிறது என்று பார்போம். இங்கே இரண்டு மென்பொருட்களோடு நிறுத்திக் கொள்கிறேன். இவ்விரண்டில் ஏதாவது ஒன்றே போதுமானது.

ஏவிஜி

இணையத்தில் இலவசமாக கிடைக்கும் ஆன்டி-வைரஸ் மென்பொருட்களுக்குள் நீண்ட நாட்களாக தரமான சேவை செய்து கொண்டிருப்பது ஏவிஜி ஆகும். தற்பொழுது விலைக்கான வெர்ஷனும், இலவச டிரையல் வெர்ஷனும் கிடைக்கப் பெற்றாலும், இதன் முற்றிலும் இலவச வெர்ஷன் இன்னமும் நமக்கு கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. வைரஸ் அப்டேட்டுக்களை அவ்வப்பொழுது கொடுத்துக் கொண்டே இருப்பது ஏவிஜி இன் சிறப்பு!

ஏவிஜி இலவச ஆன்டி-வைரஸ் இணைய தளத்தின் முகப்பு பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும். ஏவிஜி ஆன்டி-வைரஸ் பதிவிறக்கப் பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்.

அவாஸ்ட்

மற்றுமொரு பிரபலமான இலவச ஆண்டி-வைரஸ் அவாஸ்ட். இதிலும் இலவச பதிப்பு அல்லாது விலைக்கான பதிப்பும் டிரையல் பதிப்பும் கிடைக்கிறது. அவாஸ்ட் நிறுவனமும் தன் ஆண்டி-வைரஸ் மென்பொருளிற்கான அப்டேட்டுக்களை அவ்வப்பொழுது கொடுத்துக்கொண்டே இருக்கிறது.

அவாஸ்ட் இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். அவாஸ்ட் ஆண்டி வைரஸ் பதிவிறக்கப் பக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்.


ஆண்டி-வைரஸ் அப்டேட்

கணினியில் ஆண்டி-வைரஸ் மென்பொருளை நிறுவுவதற்கு அடுத்தபடி அவசியமானது எது என்றால் நிறுவப்பட்ட ஆண்டி-வைரஸ் மென்பொருளை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது தான்!

ஆட்டோமேட்டிக் அப்டேட்: மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஆண்டி-வைரஸ் மென்பொருட்களுமே இணைய இணைப்பு வாயிலாக அப்டேட்டுக்களை தானாகவே பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களை தாமே அப்டேட் செய்து கொள்ளும் திறம் படைத்தது.

மேனுவல் அப்டேட்: இணைய இணைப்பு இல்லாத கணினிகளை பராமரிக்க வேண்டி இந்த இரண்டு நிறுவனமும் ஆண்டி-வைரஸ் அப்டேட்டுகளை தம் இணைய தளத்தில் பதிவிறக்கமாக தருகின்றன! இணைய இணைப்பு உள்ள கணினியில் பதிவிறக்கம் செய்து, அதைக் கொண்டு இணைய இணைப்பு இல்லாத கணினியில் உள்ள இந்த ஆண்டி-வைரஸ் மென்பொருட்களை அப்டேட் செய்து கொள்ளலாம்!!

ஏவிஜி அப்டேட்டுகளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

அவாஸ்ட் அப்டேட்டுகளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

மேனுவலாக அப்டேட் செய்வது எப்படி?

ஏவிஜி: ஏவிஜி அப்டேட்டு .bin என்ற எக்ஸ்டென்ஷனை கொண்ட கோப்பாகும். அதை பதிவறக்கம் செய்த பின், ஏவிஜி யூசர் இண்டர்ஃபேசை ஓப்பன் செய்து கொண்டு (டிரே ஐகான் டபுள்-கிளிக்) ”டூல்ஸ்” மெனுவிலிருந்து ”அப்டேட் ஃபிரம் டைரெக்டரி” எனும் ஆப்ஷனை தெரிவு செய்து, நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் டைரெக்டரியை தெரிவு செய்யது ஓகே பட்டனை அழுத்தவும்.

அவாஸ்ட்: அவாஸ்ட் அப்டேட்டு .exe என்ற எக்ஸ்டென்ஷனைக் கொண்ட எக்சிக்யூட்டபிள் ஆகும். அதை பதிவிறக்கம் செய்த பின் அப்படியே இயக்க (ரன்) வேண்டும்.

இவ்விரண்டு ஆண்டி வைரஸ் மென்பொருட்களிலும், நீங்கள் பதிவிறக்கம் செய்வது ஒரு கணினி, அப்டேட்டு செய்வது வேறு கணினி என்றால் பதிவிறக்கம் செய்த அப்டேட்டு கோப்பை பென் டிரைவிலோ, சிடியிலோ பதிவு செய்து, அதற்குப் பின் மேலே குறிப்பிட்டிருப்பதை போல் உபயோகிக்கவும்.


லீனக்ஸிற்கான ஆண்டி வைரஸ்

”லீனக்ஸ் கணினிக்கு ஆண்டி வைரஸ் தேவையா?” என்பது ஒரு பட்டி மன்றம் சப்ஜக்ட். விவாதித்துக் கொண்டே இருக்கலாம். ஆகவே சுருக்கமாக சொல்கிறேன். லீனக்ஸ் கணினி உபயோகிப்பவர்கள், தங்கள் கணினியில் வைரஸ் புகுந்து தங்களின் லீனக்ஸ் பயன்பாட்டை பாதிக்கும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. அப்படியென்றால் எதற்கு லீனக்ஸ் கணினிக்கு ஆண்டி-வைரஸ்? சொல்கிறேன். லீனக்ஸ் கணினி வைத்திருப்போரில் பெரும்பாலானவர்கள் விண்டோஸ் கணினியுடன் கோப்பு பரிமாற்றம் கொள்பவர்கள். ஒரே கணினியில் லீனக்ஸுடன் விண்டோஸையும் நிறுவியிருக்கலாம். பென் டிரைவ் வாயிலாக மற்ற கணினியுடன் கோப்பு பரிமாற்றம் புரியலாம். ஈமெயில் மற்றும் பிற ஃபைல் ஷேரிங் முறைகளால் கோப்புகளை (கூடவே வைரஸையும் தான்!) பரிமாற்றம் செய்யலாம்.

இவ்வாறான பரிமாற்றங்கள் வாயிலாக வைரஸோ அல்லது வைரஸ் தாக்கப்பட்ட கோப்போ லீனக்ஸ் கணினியில் சேமிக்கப்படும் பொழுது என்ன ஆகிறது? இந்த வைரஸ் தாக்கப்பட்ட கோப்புகளால் லீனக்ஸிற்கு நேரிடையான பாதிப்பு இல்லை என்றாலும், இந்த லீனக்ஸ் கணினி வாயிலாக மற்ற விண்டோஸ் கணினிகளுக்கு வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பளிக்காமல் இருக்கவே லீனக்ஸ் கணினிகளுக்கும் ஆண்டி-வைரஸ் தேவைப்படுகிறது.

சரி, லீனக்ஸிற்கும் ஆண்டி வைரஸ் ஏன் நிறுவ வேண்டும் என்று இப்பொழுது புரிந்துவிட்டது. ஆனால் எப்படி அதை நிறுவுவது? எனக்கு தெரிந்தவரை இருப்பதிலேயே சுலபமான வழி நீங்கள் உபயோகிக்கும் லீனக்ஸ் டிஸ்ட்ரிப்யூஷனில் உள்ள பேக்கேஜ் மேனேஜரையே உபயோகிப்பது தான். அதில் பொதுவாக திறந்தமூல மென்பொருளான கிலாம்ஏவி எனும் ஆண்டி-வைரஸை நிறுவுவதற்கான வசதி இருக்கும். நீங்களாகவே பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும் என்றால், மேலே குறிப்பிடப்பட்டிருந்த ஏவிஜி மற்றும் அவாஸ்ட் ஆண்டிவைரஸ்களின் லீனக்ஸ் பதிப்புகளும் இலவசமாக கிடைக்கின்றது. ஏவிஜி ஆண்டி-வைரஸின் லீனக்ஸ் பதிப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும். அவாஸ்ட் ஆண்டி-வைரஸின் லீனக்ஸ் பதிப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Advertisements

2 பதில்கள் to “அத்தியாவசியமானவை”

  1. very nice

  2. […] அத்தியாவசியமானவை […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

 
%d bloggers like this: