கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

‘ஹைபர்நேட்’ பகுப்புக்கான தொகுப்பு

பவர் பட்டனை உபயோகியுங்கள்!

பதிந்தவர் அமிர்தராஜ் மேல் அக்டோபர் 10, 2008

நண்பர் ஒருவரின் கணினியில் அவருடன் அமர்ந்து வேலை முடித்தபின் கணினியை அணைப்பதற்காக பவர் பட்டனை அழுத்தியவாறு எழுந்தேன். பதறிவிட்டார் ஒரு கணம். “என்னங்க ஷட் டவுன் பண்ணலியா? ஷட் டவுன் பண்ணாமலேயே ஆஃப் பண்ணிட்டீங்களா? அப்படியும் செய்யலாமா என்ன?” சரமாரியான கேள்விகள் கேட்டவரை அமைதிப் படுத்தி ‘அப்படியும் செய்யலாம்’ மட்டுமல்ல ‘அப்படிச் செய்வதே இலகு’ என்று விளக்கினேன்.

பவர் பட்டன்

பவர் பட்டன்


பல ஆண்டுகளாக கணினியை உபயோகப் படுத்தியிருந்ததால் இன்னமும் பழைய நினைப்பிலேயே இருந்திருக்கிறார். முன்பெல்லாம், கணினியை அணைக்கும் பொழுது ஒழுங்காக ஷட் டவுன் செய்த பின்னரே பவர் பட்டனை அணைக்க வேண்டும். கணினி இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது பவர் பட்டனை தொடக்கூடாது என்றெல்லாம் சொல்லி (பயம் காட்டி?) வைத்திருப்பார்கள்.
இன்றும் அது சரிதான். ஒழுங்காக ஷட் டவுன் செய்யாமல் மின்சார இணைப்பை துண்டிக்கக் கூடாதுதான். (அதனான் தானே யு.பி.எஸ் பயன் படுத்துகிறோம்?) ஆனால் இப்பொழுது உள்ள கணினிகளின் முகப்பில் உள்ள பவர் பட்டனை கொண்டு மின்சார இணைப்பை துண்டிக்க இயலாது. ஏனென்றால், கணினி கட்டுமானத்தின் முன்னேற்றங்களால் கணினி முகப்பில் இருக்கும் பவர் பட்டனும் மாற்றப்பட்டுள்ளது (இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது!). உங்கள் கணினி மதர்போர்டும் கேபினெட்டும் ATX இரகமாக இருப்பின் முகப்பில் உள்ள பவர் பட்டனை அழுத்தினால் சாஃப்ட்வேர் மூலமாகவே ஷட் டவுன் (அல்லது செஃட்டிங்குக்கு ஏற்றார்போல ஹைபர்நேட்டோ அல்லது சஸ்பெண்டோ) ஆகுமே தவிர மின்சார இணைப்பு துண்டிக்கப்படாது. (கணினியில் பின்புறம் எஸ்.எம்.பி.எஸ். சுவிட்சை அணைத்தாலோ அல்லது யு.பி.எஸ். ஐ அணைத்தாலோ மின்சார இணைப்பு துண்டிக்கப் படும்.)

கணினியின் பவர் பட்டனை அழுத்தினால் என்ன நடக்கவேண்டும் என்பதை கன்ட்ரோல் பேனலில் உள்ள பவர் ஆப்ஷன்ஸ் வாயிலாக தெரிவு செய்து கொள்ளலாம்.

பவர் பட்டன் ஆப்ஷன்ஸ்

பவர் பட்டன் ஆப்ஷன்ஸ்

இனி நீங்களும் கணினியை அணைப்பதற்கு மவுசையும் கீபோர்டையும் தொடாமல் இலகுவாக பவர் பட்டனை உபயோகியுங்கள்!

.... இங்கே பதியப்பட்டது கணினி, விண்டோஸ், ஹைபர்நேட் | குறிச்சொல்லிடப்பட்டது: , , | 6 மறுமொழிகள் »

இலகுவாக ஹைபர்நேட் செய்ய

பதிந்தவர் அமிர்தராஜ் மேல் செப்டம்பர் 19, 2008

ஹைபர்நேட் செய்வதன் பயன், அதை செய்வது எப்படி, அதற்கு ஒரு ஷார்ட்கட் அமைப்பது எப்படி என்றெல்லாம் எனது பதிவுகளில் எழுதியிருந்தேன். இப்பொழுது இலகுவாக ஹைபர்நேட் செய்யும் விதமாக டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட்டை நிறுவ இன்ஸ்டாலர் ஒன்றை கணித் துளி ஆதரவாளர்களுக்கென தயாரித்துள்ளேன். அதை பாக்ஸ் நெட் பைல் ஷேரிங் மூலம் பகிரவும் செய்துள்ளேன். பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்துங்கள். அதன் தொடுப்பு இதோ கீழே …
http://www.box.net/shared/pgv4q3jl6b

.... இங்கே பதியப்பட்டது விண்டோஸ், ஹைபர்நேட் | குறிச்சொல்லிடப்பட்டது: , | 4 மறுமொழிகள் »

ஹைபர்நேட் செய்ய ஒரு ஷார்ட்கட்

பதிந்தவர் அமிர்தராஜ் மேல் ஆகஸ்ட் 11, 2008

நண்பர் பாலாவின் கணினியில் ஹைபர்நேட் டேப் காணானதால் வேறு வழியில் ஹைபர்நேட் செய்வதற்கான வகை தேடினேன். என் கணினியில் ஹைபர்நேட் ஆப்ஷன் கிடைப்பதால், இந்த ஆப்ஷன் ஏன் நண்பரின் கணினியில் மட்டும் வருவதில்லை என்று ஆராய்ச்சி செய்ய இயலவில்லை. தற்போதைக்கு ஏதாவது குறுக்கு வழி இருந்தால் அதை பின்பற்றுவது, ஆராய்ச்சியெல்லாம் பின்னர் பார்த்துக் கொள்வது என்று நினைத்து, குறுக்கு வழி ஒன்றினை கீழே கொடுக்கிறேன்.

டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து நியூ >> ஷார்ட்கட் என தெரிவு செய்யவும்.

ஷார்ட்கட் லொகேஷனில் பின்வருமாறு தட்டச்சவும்.

%WINDIR%\system32\rundll32.exe PowrProf.dll, SetSuspendState

நெக்ஸ்ட் பொத்தானை கிளிக்கவும்

பெயரளிக்கும் பெட்டியில் ஹைபர்நேட் என்று தட்டச்சித்து  பினிஷ் பொத்தானை கிளிக்கவும்.

இப்பொழுது இந்த ஷார்ட்கட்டை கிளிக்கினால் கணினி ஹைபர்நேட் ஆகவேண்டும்!

“ஹைபர்நேட் ஆனால் பரவாயில்லை…, வேறு ஏதாவது ஆனால்…???” என திருவிளையாடல் தருமி போல் பாலா நினைப்பது தெரிகிறது.

இந்த முறையை ஹைபர்நேட் எனேபிள் ஆகியிருக்கும் என் கணினியில் கடைப்பிடிக்கும் பொழுது நன்றாக வேலை செய்கிறது. உங்கள் கணினியில் அப்படியே “வேறு ஏதாவது” ஆனால் கவலைப் படாதீர்கள். கணினியை மீண்டுமாக ஸ்டார்ட் செய்யுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

.... இங்கே பதியப்பட்டது XP, ஹைபர்நேட் | 2 மறுமொழிகள் »