கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

‘மற்றவை’ பகுப்புக்கான தொகுப்பு

எம் எஸ் – டாஸ் 5

Posted by அமிர்தராஜ் மேல் மார்ச் 27, 2010

அலுவலகத்தில் பழைய அலமாரி ஒன்றை சுத்தம் செய்த நபர், அதிலிருந்த மைக்ரோசாஃப்ட்-டாஸ் 5 ஃபிளாப்பி டிஸ்குகளை என்னிடம் கொண்டு வந்து, “இதையெல்லாம் என்ன செய்வது?” என்று கேட்டார். அந்த லோ டென்சிட்டி ஃபார்மேட், அதாவது 360 கே.பி திறன் கொண்ட, ஐந்தேகால் அங்குல டிஸ்குகளைக் கண்ட மாத்திரத்திலேயே பழைய நினைவுகள் மெதுவாக புரள ஆரம்பிக்க, என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உடனே புரிந்து விட்டது. டிஜிட்டல் கேமிராவை எடுத்து மூன்று முறை கிளிக்கி, அதில் ஒரு படத்தை தெரிவு செய்து, கிராப் மற்றும் ரீசைஸ் செய்து “கணித் துளி” முத்திரையும் குத்தி இதோ உங்கள் பார்வைக்காக பதிவு செய்கிறேன்.

நீண்ட நாட்களாக வலைப்பதிவில் எழுதாமல் இருந்த நான் மீண்டும் ஒரு இடுகை எழுத தூண்டு கோலாகவும் அமைந்தது இந்த டிஸ்குகள்!

.... இங்கே பதியப்பட்டது மற்றவை | 1 மறுமொழி »

இலவச யூனிக்ஸ் ஷெல் அக்கவுண்டு

Posted by அமிர்தராஜ் மேல் அக்டோபர் 31, 2008

முன்பொரு ஒரு சமயத்தில் எனக்கு அவ்வப்பொழுது பரீட்சார்த்தமான சிறு சிறு சோதனைகள்  செய்து பார்க்க (விளையாட்டாக செய்து பார்க்க) ஒரு தற்காலிக யூனிக்ஸ் அக்கவுண்டு தேவைப்பட்டது. இலவச யூனிக்ஸ் ஷெல் அக்கவுண்டு என்று ஆங்கிலத்தில் கூகிளில் தேடினால் பல தளங்களின் முகவரி கிடைத்தது. நானும் ஒரு சிலவற்றை முயற்சி செய்து பார்த்தேன். இந்த இலவச சேவையை வழங்கும் பெரும்பான்மையான தளங்களில் உள்ள குறைபாடு என்னவென்றால் நம்பகமான சேவை இல்லாததுதான்.  சில சமயம் வேலை செய்யும்; பல சமயம் வேலை செய்யாது; சில மாதங்கள் கழித்து அந்த தளமே காணாமல் சென்றுவிடும்! இவ்வாறான சேவை நடத்துவதில் வர்த்தக ரீதியான இலாபம் ஏதும் இல்லாததால், வெறும் சேவை மனப்பான்மையையே நம்பியிருக்கிறது இச்சேவைகள். இத்தகைய சேவை நடத்த முற்படுவோரில் பெரும்பாலானவர்கள், உபயோகமற்று கிடக்கும் மிகப் பழைய கணினிகளைக் கொண்டே இச்சேவைகளை துவக்குகின்றனர். கணினி பழுதுபட்டால் சேவையும் பழுதுதான்!

என்னுடைய தேவை, நான் விரும்பும் பொழுது ஒரு ஷெல் சேவையை உபயோகிக்க வேண்டும். அவ்வளவுதான்! பலவற்றை ஆராய்ந்த பின், இரண்டு சேவைகளை உபயோகித்திருக்கிறேன். அவை:

  1. எஸ்.டி.எஃப்
  2. கிரெக்ஸ்

இந்த இரண்டு சேவைகளும் வழங்கும் வசதிகள் ஒன்றிற்கு ஒன்று சற்று வித்தியாசப்படும்.  இரண்டிலுமே அக்கவுண்டு தொடங்கி தேவைக்கேற்ப உபயோகித்துக் கொள்ளலாம். புதிதாக கணக்கு துவங்குபவர்களுக்கு சற்று கூடுதலாக கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறார்கள். ஹேக்கர்கள் மற்றும் நாசம் செய்ய முற்படுவோரிடமிருந்து சிஸ்டத்தை காப்பதற்காகவே இந்த ஏற்பாடு. புதிய பயனர் அவ்வாறானவர் அல்ல என்று அறிந்த பின்னர் (வேலிடேட் செய்யப்பட்ட பின்) அதிக வசதிகள் பெறலாம். (நமக்கென்று மின்னஞ்சல் மற்றும் இணைய தளம் கூட உண்டு!)

யூனிக்ஸ் புதிதாக பழகுபவர்கள், விண்டோஸ் சூழலில் இருக்கும் பொழுது யூனிக்ஸில் சிறு சிறு சோதனைகள் செய்து பார்க்க விரும்புவோர், மற்றும் ஆர்வலர் யாவரும் உபயோகிக்க வசதியானதாகும் இந்த இலவச ஷெல் அக்கவுண்டுகள். நீங்களும் ஒரு கணக்கு இன்றே துவங்கிப் பாருங்களேன்!

.... இங்கே பதியப்பட்டது இணையம், மற்றவை | குறிச்சொல்லிடப்பட்டது: , | 3 மறுமொழிகள் »

 
Follow

Get every new post delivered to your Inbox.