எக்செல், கால்க்: இலகுவாக டேபிளை தெரிவு செய்ய
Posted by அமிர்தராஜ் மேல் பெப்ரவரி 25, 2011
மைக்ரோசாஃப்ட் எக்செல் மற்றும் ஓப்பன் ஆஃபீஸ் கால்க் ஸ்பிரெட்ஷீட்டுகளில் டேபிள் வடிவமைத்து நாம் உபயோகப் படுத்துவது உண்டு. அவ்வாறு உபயோகப் படுத்தும் பொழுது பல சமயம் அந்த டேபிளை மட்டும் தெரிவு (செலக்ட்) செய்ய வேண்டி வருவது உண்டு. உதாரணமாக அந்த டேபிளில் உள்ள செல்களுக்கு பார்டர் அமைப்பதற்காக தெரிவு செய்ய வேண்டி வரலாம்.
டேபிள் சிறியதாக இருக்கும் பொழுது இது ஒரு பிரச்சினையே அல்ல. ஆனால் டேபிள் சற்று பெரியதாக இருந்தால் அதை தெரிவு செய்ய சற்று முயற்சி எடுக்க வேண்டி இருக்கும். இதுவும் மிக பிரமாதம் இல்லை என்றாலும், அடிக்கடி இதை செய்ய வேண்டி வரும் பொழுது, சுருக்கு வழி ஏதாவது இருக்காதா என்று எண்ணத் தோன்றும். இருக்கத்தான் செய்கிறது இதற்கு ஒரு சுருக்கு வழி. அதுவும் எக்ஸெல் மற்றும் கால்க் ஆகிய இரண்டிலுமே வேலை செய்யும் ஒரு சுருக்கு வழி.
டேபிளின் ஏதாவது ஒரு (காலி அல்லாத) செல்லில் இருந்து கொண்டு கண்ட்ரோல் மற்றும் ஆஸ்டெரிஸ்க் விசிகளை அழுத்தவும். அவ்வளவுதான். அந்த டேபிளின் எல்லா செல்களும் தெரிவு செய்யப்பட்டு விடும்!







Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னார்
Informative.. My wishes!
அமிர்தராஜ் சொன்னார்
மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!!
S.Arurlaj சொன்னார்
Nice. Useful shortcut.
அமிர்தராஜ் சொன்னார்
தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி!
ஒரு சில சமயம் இது போல் சிறு குறிப்புகளை எழுத நினைக்கும் பொழுது, “அட… இது எல்லோருக்கும் தெரிந்திருக்காதா என்ன…. இதைப் பற்றியா எழுதுவது?” என்று நினைத்து எழுதாமல் விட்டு விடுவதுண்டு. ஆனால் இப்படி மறுமொழிகள் வருவதைப் பார்க்கும் பொழுது, சிறு குறிப்பாக இருந்தாலும் எழுதலாமே என்று ஊக்கம் பிறக்கின்றது.
தங்கள் மறுமொழிக்காக மீண்டும் நன்றி!!
subash சொன்னார்
Very Useful