கணித் துளி

கணினி பற்றி சிறு துளிகள்

XP – ஹைபர்நேட்

பதிந்தவர் அமிர்தராஜ் மேல் ஆகஸ்ட் 3, 2008

ஹைபர்நேட் என்றால் என்ன? அது எவ்வாறு உபயோகப் படுகிறது?

விண்டோஸில் “ஹைபர்நேட்” என்பது கணினியை மூடும் வழிகளில் ஒன்றாகும்.

கணினியை சாதாரணமாக ஷட் டவுன் செய்யும் பொழுது அனைத்து புரோக்கிராம்களையும் மூடிவிட்டு ஷட் டவுன் செய்கிறோம். அவ்வாறு நாம் மூடாவிட்டாலும் விண்டோஸ் தானாகவே அனைத்து புரோக்கிராம்களையும் மூடிவிட்ட பின்னரே ஷட் டவுன் ஆகிறது.

கணினியில் நாம் ஆரம்பித்த பணியை முழுமையாக முடித்து விட்டு பின் ஷட் டவுன் செய்வதாக இருந்தால் இது பரவாயில்லை. நம் பணியில் ஒரு பகுதியை மட்டுமே முடித்து விட்டு, மீதியை நாளை தொடரலாம் என்று இருந்தால் அடுத்த முறை கணினியை ஆன் செய்தவுடன் நம் பணியை தொடர மீண்டுமாக நமக்கு தேவையான புரோக்கிராம்களை இயக்கி, நம் கோப்புகளை திறந்து நாம் விட்ட இடத்தை கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின்னரே நம் பணியை  மீண்டும் தொடர வேண்டும், அல்லவா?

கணினியை சாதாரணமாக ஷட் டவுன் செய்யாமல் “ஹைபர்நேட்” செய்தால், நாம் உபயோகப் படுத்திக் கொண்டிருந்த புரோக்கிராமகளை மூடத் தேவையில்லை. நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த புரோகிராம்கள் மற்றும் கோப்புகளின் நிலையையும் விண்டோஸ் அப்படியே சேமித்து வைத்து விட்டு பின் கணினியை மூடும். நாம் அடுத்த முறை கணினியை ஆன் செய்யும் பொழுது கடைசியாக நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த புரோக்கிராம்களும் கோப்புகளும் நாம் கடைசியாக விட்ட நிலையில் அப்படியே இருக்கும். நாம் நம் பணியை அப்படியே தொடரலாம். இதுவே ஹைபர்நேட் செய்வதில் உள்ள வசதி ஆகும்.

3 பதில்கள் -க்கு “XP – ஹைபர்நேட்”

  1. சந்தர் சொன்னார்

    இந்த பின்னூட்டத்தை நான ஃபயர்பாகஸ் மேல் கூட்டு வழியாக அனுப்புகிறேன். மிகவும் சுலபமாகஇருக்கிறது. மற்ற சில மேலகூட்டுக்களையும் பயன்படுத்தபின் தகவலை பரிமாறிக்கொள்கிறேன்.வார்த்தை திருத்துதல் இந்த மேல்கூட்டுடன் இருப்பது கூடுதல் சிறப்பு.

  2. [...] அமிர்தராஜ் மேல் செப்டம்பர் 19, 2008 ஹைபர்நேட் செய்வதன் பயன், அதை செய்வது எப்படி, அதற்கு ஒரு [...]

  3. சுபாஷ் சொன்னார்

    நானும் ஹைபர்நேட்டுதான்!!!!

    மேல் கூட்டு என்றால் என்ன சுந்தர்?

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>